புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 25, 2018)

இரட்சிப்பின் தேவன்

சங்கீதம் 27:1

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?


தாவீது என்னும் இளைஞன், இஸ்ரவேலை ஆளும்படிக்காக, அவனது இளம் வயதிலேயே, சாமுவேல் என்னும் தீர்க்கதரிசி வழியாக, தேவனால் முன் குறிக்கப்பட்டார். சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக வரும்வரை, அநேக நெருக்கங்களை சந்திக்க நேரிட்டது, அந்நாட்க ளிலே இஸ்ரவேலின் ராஜாவாயிருந்த சவுல், தாவீதை கொன்றுபோடு ம்படி வகை தேடினான். தன் படைப்ப லத்தோடு, தாவீதை பின்தொடர்ந்தான். ஆனால் அவை எல்லாவற்றிலும் தாவீது, தேவன் மேல் தன் முழு நம் பிக்கையையும் வைத்திருந்ததால். சற் றும் அஞ்சவில்லை. “எனக்கு விரோத மாக ஒரு இராணுவக்கூட்டம் பாளய மிறங்கினாலும், என் இருதயம் பயப் படாது. என்மேல் யுத்தம் எழும்பினா லும், இதிலே நான் நம்பிக்கையாயி ருப்பேன்” என்று அறிக்கை செய்தார். சில வேளைகளிலே, மனிதர்களுக்கு கோபம் வரும் போது, “நான் ஒருவருக்கும் பயமில்லை” “யாரும் எனக்கு ஒன்றும் செய்ய முடியாது” என்று அகங்காரத்துடன் சொல்வ துண்டு. தாவீதோ, அவ்வண்ணமாக எண்ணம் கொள்ளாமல், தன்னை கொன்று போடும்படி பின்தொடரும் சவுலுக்கு, தேசத்தின் ராஜாவிற்கு ரிய கனத்தை கொடுத்து வந்தார். அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நி லையிலும், தன்னை கொன்றுபோடும்படி பின்தொடரும் சவுலையும் அவருடைய இராணுவக்கூட்டத்தையும் கண்டு அஞ்சாமல், “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” என்று அறிக்கை செய்தார். அதேபோலவே எங்கள் வாழ்க்கையிலும், எங் களை எதிர்த்து பெரும் சவால்கள் வரும்போது, அகங்காரத்துடன் அல்ல, எங்களை தேவ சமுகத்திலே முற்றாக தாழ்த்தி, அவரால் இரட்சிப்பு வரும் என்று திட நம்பிக்கையோடு, விசுவாசத்தின் வார் த்தைகளை முழுமனதுடன் அறிக்கை செய்ய வேண்டும். தேவனை உண்மை மனதுடன் நம்பி வாழ்பவர்களை தேவன் தாமே, தீங்கு நாட்களிலும், தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, கன்மலையி ன்மேல் உயர்த்துவார்.

ஜெபம்:

தேவனே, இருள் சூழ்ந்த உலகில் என் பாதைக்கு வெளிச்சமானவரே! என்னை எதிர்த்து வரும் சத்துருவின் சதிகளை கண்டு சோர்ந்து போகாதபடி, உம்மில் பெலன் கொள்ள கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 சாமு 22:32-34