புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 16, 2018)

ஞானவான்கள்...

நீதிமொழிகள் 13:20

ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.


ஊருக்கு புதிதாக குடியேறிய மனிதன், தான் யாருடன் நட்பு கொள் வதென்பதில் மிகவும் கருத்துள்ளவனாக இருந்தான். அயலிலுள்ள நற்பண்புள்ள ஒரு குடும்பத்துடன் நட்புக் கொண்டான். அதைத் தொட ர்ந்து காலப்போக்கில், அந்த நற்பண்புள்ள குடும்பத்தினரின் நல்ல நண்பர்களையும் தன் நண்பர்கள் ஆக்கிக் கொண்டான். இப்படியான ஒரு நல்லுறவு பல நல்லுறவுகளை ஏற்படுத்துகின்றது. ஆனால் அந்த மனிதன், அந்த ஊருக்கு வந்தபோது தீய பழக்கங்கள் உள்ள ஒருவனுடன் சேர்ந்திருந்தால், காலப்போக்கில், மற்ற தீயபழக்கமுள்ளவர்களும் இவனுடன் சேர்ந்து கொள்வார்கள். சற்று சிந்தித் துப் பாருங்கள்! ஒரு மனிதனுடைய வாழ்விலுள்ள ஒரு பாவம், மற்றைய பாவங்களுக்கு அழைப்பு கொடுக்கின் றது. இன்னுமொருவிதமாக கூறப் போனால், ஒரு பாவம் இன்னுமொரு பாவச் சோதனைக்கு எங்களை இட்டுச் செல்லுகின்றது. எடுத்துக் காட்டாக, களவு எடுத்த மனிதன் ஒருவன், தன் களவை மறைப்பதற்கு பொய் சொல்ல தயங்க மாட்டான். சிறிய விதை எப்படி வளர்ந்து பெரும் விருட்சமாக மாறி எப்படி ஒரு மனிதனின் வாழ்வை கெடுத் துப் போடுகின்றது என்பதைப் பற்றி நேற்றய நாளில் தியானித்தோம். தேவனுக்கு பயந்து வாழ்கின்ற மனிதனோடு, அவனுக்கு ஒத்த மனிதர்களே நட்புக் கொள்ள முடியும். அதே போன்று ஒரு மாம்ச இச்சையோடு மற்ற யாவும் இணைக்கப்பட்டிருக்கின்றது. எனவே நாங்கள் எங்கள் வாழ்வில் நன்மையின் ஊற்றாகிய இயேசுவோடு இசைந்திருந்தால், எப்போதும் நன்மையான கனிகளையே கொடுப் போம். அது மாத்திரமல்ல, தீமை எங்கள் உறைவிடம் அணுகாது. தேவ னுடைய கட்டளைகளை துணிகரமாக மீறிநடக்கின்றவர்கள், தீமையை விதைக்கின்றார்கள், அவர்கள் தாங்களே தங்களுக்கு கண்ணியை வரு வித்து, ஈற்றில் நித்திய மரணத்தை அடைகின்றார்கள். தேவனுக்கு பய ப்படாமல் வாழும், தவறான கூட்டுறவை விட்டு விடுங்கள்;. ஞானவா ன்கள் தேவனுக்கு பயந்து அவருடைய வழியிலே நடக்கின்றார்கள். அவ ர்கள் நன்மையை விதைக்கின்றார்கள், முடிவிலே நித்திய ஜீவனை பெற்றுக் கொள்கின்றார்கள்.

ஜெபம்:

பராக்கிரமமுள்ள தேவனே, இந்த பூமியிலே வாழும் நாட்களிலே நன்மையின் ஊற்றாகிய உம்மை பற்றிக் கொண்டு, உம்முடைய வழியிலே வாழும்படியாய் என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 15:33