புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 08, 2018)

வீண் புகழ்ச்சியை நாடாதிருங்கள்

லூக்கா 17:10

அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிர யோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.


பார்வைக்கு வெள்ளியாகவும், பொன்னாகவும் இருப்பவைகள் உண்டு. அதனுள்ளே இருப்பதெல்லாம் சுத்தமான வெள்ளி அல்லது பொன் என்பதை சோதித்தறிகின்றார்கள். இந்த உலோகங்களை பரிசோதி க்கும் போது அதன் உண்மையான நிலை யாவருக்கும் வெளிப்படுத்த ப்படும். வெள்ளியை மண் குகையும், பொன்னை புடமும் சோதித்த றியும், அதே போல மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே அவனுடைய சோதனை என்று பரிசு த்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். ஒரு மனு~னுக்கு புகழ்ச்சி உண்டா கும் போது, அவன் வெளிக்காட்டும் கிரியைகளால் அவன் தான் யார் என்று அறிந்து கொள்வான். தேவன் எங்களு க்கு கொடுக்கும் உயர்வுகளினால் நாங்கள் பெருமை அடைந்து விடக் கூடாது. தேவன் கொடுத்த தங்களு டைய ஆதிமேன்மையைக் காத்துக் கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்த லத்தை விட்டுவிட்ட தூதர்கள் தங்கள் பெருமையினால் விழுந்து பிசாசுகளாக மாறிப்போனார்கள். அதே போல சில மனிதர்கள் தங்களுக்குண்டான புகழ்ச் சியை, இந்த பூமிக்குரிய தங்கள் சொந்த இலாபத்திற்காக பயன் படுத்திக் கொள்கின்றார்கள். இதனால் தங்களையே தாங்கள் அழிவின் பாதைக்கு இட்டுச் செல்கின்றார்கள். மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். நாங்கள் செய்யும் நன்மைகளை பற்றி மனிதர்கள் பேசுவதை நாங்கள் தடுக்க முடியாது. அவர்கள் அப்படி பேசும் போது அவைகளை நாங்கள் உள்வாங்கிக் கொள்ளக் கூடாது. தேவனுடைய சமுகத்திற்கு முன்னதாக எங்களை தாழ்த்தி, இது தேவனுடைய கிருபை, நாங்கள் எங்கள் கடமையை மாத்திரம் செய்தோம் என்று மனதார அறிக்கையிட வேண்டும். மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தரையே மேன்மை பாராட்ட வேண்டும்.

ஜெபம்:

மாட்சியை நிறைந்த தேவனே, வீணான புகழ்ச்சிகளினால் நாங்கள் இழுப்புண்டு போய்விடாதபடிக்கு எப்போதும் உம் சமுகத்திலே தாழ்மையுள்ள இருதயத்தோடு இருக்க எங்களை வழிடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏரே 9:23-24