புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 01, 2018)

உரிய கனத்துடன் நடத்துங்கள்

1 பேதுரு 2:17

எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்ப ண்ணுங்கள்.


உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால் வைக்காதே என்று நீதிமொழிகளின் புத்தகத்திலே வாசிக்கின்றோம். இதற்கொத்ததான பழமொழிகளை, வெவ்வேறு பாஷைகளில் காணலாம். “நித்தம் போனால் முத்தம் சலிக்கும்”இ “அளவிற்கு மிஞ்சிய ஏதும் ஒன்றுக்கும் உதவாது” என்ற வார்த்தை பிரயோகங் களை கேட்டிருக்கின்றோம். எங்கள் நாளாந்த வாழ்க்கையிலே எங்கள் உறவுகள், நண்பர்கள், அயலவர்கள், சபை விசுவாசிகள் என்று பலதரப்பட்ட மனிதர்களுடன் இடைப்படுகின்றோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனையின் முக்கிய கருப்பொரு ளானாது, நாங்கள் ஒருவரில் ஒருவர் அன்பாக இருக்க வேண்டும் என்பதா கும். கட்டளை கொடுக்கப்பட்டிருக்கின் றது, எனவே நான் அந்த கட்டளை களை கைகொள்ள வேண்டும் என்று கடமைக்காக செயலாற்றுவது கிறிஸ் தவ வாழ்க்கை அல்ல. தேவனுடைய கட்டளைகளை முழு இருதயத் தோடு கைகொள்ள வேண்டும். நாங்கள் ஒருவரை உண்மையாக அன்பு செய்தால் (உறவினர், நண்பர், அயலவர், விசுவாசி) அந்த நப ருடைய நிலையை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களு டைய தனிப்பட்ட வாழ்வின் விவகாரங்களிலே அதிகமாக ஈடுபடுவதை நாங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட உறவினர், நண்பர்கள் அயலவர்கள், விசுவாசிகளுடைய அலுவல்களில் துணிகரமாக நுழையக்கூடாது. அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையில், அவர்கள் நடப்பிக்க வேண்டிய காரியங்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. எங்களுக்கு பொழுது போகவில்லை என்று மற்றவர்களுடைய வாழ்வின் நிலையை எண்ணிப் பார்க்காமல், அவர்களுடைய வீடுகளுக்கு அடிக்கடி செல்வது அவர்களுக்கு பல அசௌகரியங்களை உண்டு பண்ணும். நாளடைவிலே யாவருக்கும் சலிப்பை உண்டு பண்ணும். இந்த நீதிமொழியை எதிர்மறையான மன நிலையுடன் நோக்காமல், அயலவருக்கு நாங்கள் கொடுக்கும் கனத்துடனும், அன்புள்ள உள்ளத்தோடும் நோக்கப்பட வேண்டும். எங் களை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்று விரும்புகின் றோமோ, அதே போல மற்றவர்களை நாங்கள் நடத்த வேண்டும்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, இந்த உலகத்திலே மனிதர்கள் மத்தியிலே மேன்மையாக கணிக்கப்படும் ஒடுக்கு முறைகளைவிட்டு, உம்மை அறிகின்ற அறிவிலே வளரும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 13:34