புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 29, 2018)

கர்த்தர் என் சகாயர்...

எபிரெயர் 13:6

அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.


வாழ்கையிலே எப்பக்கமும் நெருக்கப்பட்டு, இனி போவதற்கு வழி ஏதும் இல்லை, உதவி செய்ய ஒருவராலும் முடியாது என்ற விரக்தி நிலையை அடைந்த மனிதன் வலுவாய் சோர்வடைந்து போனான். அந்த நேரத்திலே, செங்கடல் அவனுக்கு ஞாபகம் வந்தது. இலட்சக்க ணக்காக ஜனங்கள் செங்கடலின் கரையில் நிற்கின்றார்கள். தங்கள் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை கிடைத்து சில நாட்களும் ஆகவி ல்லை, தங்களை பின் தொடர்ந்து வரும் எகிப்தின் இராணுவத்தைக் கண்டு கலங்கினார்கள். நானூறு வருடங்கள் அடிமைகளாக இருந்தவர் களுக்கு, சாதாரண யுத்தத்தை நடப்பி க்கும் படைப்பலம், யுக்தி, ஆயுதங்கள் ஏதும் இல்லாத ஜனங்கள். எப்படியாக வல்லமையுள்ள எகிப்த்தின் படைப்பல த்திற்கு முன்பாக நிற்க முடியும்? முன் பாக செங்கடல், பின்பாக எகிப்தின் சேனை. ஆனால் அவர்கள் தம்மை அழைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் தங்களோடிருப்பதை மறந்து போனார்கள். தண்ணீரை உண்டாக்கி, வரையறை போட்ட தேவன் அவர். ராஜ்யங்களை தம்முடைய சித்தப்படி ஆளுக்கின்ற தேவன் அவர். சகலமும் அவருடைய ஆளுகைக்கு கீழ்ப்பட்டிருக்கின்றது. எகிப்த்தின் இராணுவத்திற்கும், தம்முடைய ஜனங்களுக்கும் இடையில் தேவன் மேகத்தூணை உண்டு பண்ணினார். எகிப்தின் இராணுவத்திற்கு அது காரிருளாக இருந்தது, ஆனால் இஸ்ரவேல் ஜனங்களின் பக்கம் அது வெளிச்சமாக இருந்தது. முன்பாக நின்ற செங்கடல் இரண்டாக பிரிந்து வழி விட்டது, வெட்டாந்தரையிலே நடந்து, செங்கடலைக் கடந்தார்கள். எகிப்தின் இராணுவம் அவ்வழியாய் கடக்க முயன்ற போது, தண்ணீர் அவர்களை மூடிக் கொண்டது. ஆம், எங்களை எதி ர்க்கும் எந்த சூழ்நிலைகளுக்கும் மேலான தேவனை நாங்கள் ஆரா திக்கின்றோம். சாதகமில்லாத சூழ்நிலைகளை கண்டு மனம் சோர்ந்து போகும்போது, கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள். உண்மையான உள்ளத்தோடு, மெய்த் தேவனாகிய கர்த்தரிடம் விண்ணப்பியுங்கள். தம்மை நோக்கி கூப்பிடுகின்ற யாவருக்கும் பதில் கொடுக்கின்ற ஜீவனுள்ள தேவன். அவரின் அன்புக்கு அளவேயில்லை.

ஜெபம்:

கிருபை நிறைந்த நல்ல தகப்பனே, இந்த உலகிலே எங்களை எதிர்த்து வரும் சவால்களை கண்டு கலங்கி நிற்காமல், உம்மைப் பற்றிக் கொண்டு, ஜெயங்கொள்ளத்தக்கதாக என்னை பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 31:8