புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 24, 2018)

தற்போதைய பாடுகள்

1 பேதுரு 5:10

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற  சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;


சிறு பிரயாத்திலிருந்து தன் தந்தையின் சிட்சை அவசியமற்றது என தன் மனதிலே எண்ணியிருந்த மனிதன், தன் வாலிபப் பிராயத்திலே சில வேளைகளிலே அதை அறிக்கையிட்டான். இப்போது, அவன் தந்தை அவனுடன் இல்லை. ஆனால்  தன்னுடைய வாழ்க்கையின் முன் னேற்றத்திற்கு தந்தையே காரணம் என்று திட்டமாக அறிந்து கொண் டான். இன்று எங்கள் பரலோக பிர யாணத்தை சற்று ஆராய்ந்து பார்ப் போம். “தற்போது பரலோக தந்தை யின் சிட்சையும் பின்பு பரலோக தந்தையுடன் நித்திய வாழ்வு” அல்லது “தற்போது கண்போன போக்கில் வாழ் ந்து பின்பு நித்திய ஆக்கினை”. புர லோகத்தை நோக்கி பயணம் சென்று கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கை யிலே, இவ்விரண்டில் எதை விரும்பு வீர்கள்? தேவனுடைய பிள்ளை கண் ணீரின் பாதையிலே நடந்தாலும், அவ ர்கள் அதை களிப்பாக மாற்றிக் கொள் ளும்படியான அனுக்கிரகத்தை தேவன் அருளுகின்றார். தேவனுடைய பிள்ளை கள், பாடுகளினால் அழிந்து போகின்ற வர்கள் அல்ல. இந்த உலகத்திலே வரும் பாடுகளினால், “நான் என்னும் மனிதன்”; தங்களை விட்டு நாளுக்கு நாள் சிறுகச் செய்கின்றார்கள். பாடுகளை பங்காக்கி, அவற்றின் மத்தி யில் இயேசு கிறிஸ்துவின் சாயலை நாளுக்கு நாள் தங்களில் பெரு க்கிக் கொள்கின்றார்கள். எனவே அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த இலேசான உபத்திரவத்தை கண்டு மனமடிவடைந்து போய்விடாதிரு ங்கள். மனிதர்கள் தங்கள் கண்போன வழியில் வாழ்ந்து அழிந்து போவது தேவனுடைய சித்தம் அல்ல. அதில் நாங்களும் பிரியப்படு கின்றவர்களுமல்ல. ஆனால், ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனு~ருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கி னைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

ஜெபம்:

பரலோக தேவனே, உலக சுகபோகங்களை விரும்பி  என் வாழ்வை அழித்துப் போடாதபடிக்கு, எப்போதும் உம்முடைய வழியில் நடக்க எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:17-18