புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 23, 2018)

தேவனுக்கு பயப்படும் பயம்

நீதிமொழிகள் 1:7

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.


“தேவன் தண்டிப்பார், தேவன் அடித்துப் போடுவார்” என்பது தேவனுக்கு பயப்படும் பயம் அல்ல. நியாயத்தீர்ப்பு என்று ஒரு நாள் உண்டு. தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல், இந்த உலகத்தின் வழியில் வாழ்பவர்கள் அந்த நாளை குறித்து பயந்து நடுங்க வேண்டும். ஆனால் தேவனுடைய பிள்ளைகளாக வாழும் மனிதர்கள் நியாயத்தீர்ப்பை குறித்து பயப்படத் தேவையில்லை. தேவன் ஒருவர் உண்டென்று பிசாசுகளும் விசு வாசித்து, நடுங்குகின்றன. தேவன் அன்பாகவே இருக்கின்றார் நாங்கள் அவருடைய பிள்ளைகள். தாம் நேசி க்கின்றவர்களை அவர் சிட்சித்து, அதிக கனிகளை கொடுக்கும்படி சுத்தம் பண்ணுகின்றார். எனவே, தேவனை அறியாத நாட்களிலே கொண்டிருந்த “தேவன் அடிப்பார்” என்னும் பழைய கொள்கையை உங் களை விட்டு அகற்றிப் போடுங்கள். தேவனுக்கு பயப்படுகின்றவன் அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளுகின்றான். அவரை அன்பு செய்யாமல் கற்பனைகளை கைகொள்ளுகின்றேன் என்று ஒருவன் சொன்னால், அவன் பொய்யன் என்று வேதத்திலே வாசிக்கின்றோம். யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனு~ன் உத்தமனும் சன்மார்க் கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமா யிருந்தான். அவன் தேவனை அன்பு செய்கின்றவனாயிருந்த படியால், பிசாசானவன் பெரிதான பொல்லாப்பை அவன் வாழ்க்கையில் கொண்டு வந்தபோதும், அவன் தேவன்மேல் பற்றுதலுள்ளவனாயிரு ந்தான். எனவே, நாங்கள்  தேவனுக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கும் போது, தேவன்; எங்களை பொல்லாப்பிலிருந்து பாதுகாக்கி ன்றார். எங்களை தண்டிப்பதற்காக தேவன் எங்களுக்கு கட்டளைகளை தரவில்லை. மாறாக இந்த உலகத்தில் வாழும்வரை பிசாசானவனின் தந்திரத்திற்கு தப்பி பரலோகம் செல்வதற்காக அவைகளை தந்திருக்கின்றார். தேவனுக்கு பயப்படுகின்றார்கள், பயபக்தியோடு, தேவனை ஆராதித்து, சகல கனத்தையும் மகிமையையும் அவருக்கு செலுத்துகின்றார்கள். தங்கள் தெய்வீக சுபாவங்களை யாவருக்கும் காண்பிக்கின்றார்கள்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, நீர் என்னை உம்முடைய பிள்ளையாக ஏற்றுக்கொண்ட உம்முடைய அன்பிற்காக ஸ்தோத்திரம். வாழ்நாள் முழுதும் பயபக்தியோடு உம்மை சேவிக்க கிருபை தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - 1 யோவான் 4:7-8

Category Tags: