புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 20, 2018)

தேவன் விரும்பும் கீழ்ப்படிவு

1 பேதுரு 2:18

வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்;. நல்லவர்களுக் கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.


ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களிலே, வீட்டு வேலைகளை கவனிப் பதற்காக, வீட்டு எஜமான்கள் அடிமைகளை வைத்திருந்தார்கள். அவர் கள் எப்படி நடத்தப்பட வேண்டும், அவர்களுடைய ஊதியம் என்ன? என்பவைகளை பற்றிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருந்தது. ஒப்பனையாக நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றால், இன்று நாங்கள் பல துறைகளிலே வேலைக ளுக்காக அமர்த்தப்பட்டிருக்கின்றோம். சில வேலைகள் மதிப்புக்குரியது என மனிதர்கள் கருதுகின்றார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் எஜமானர்கள் இருக்கின்றார்கள். சிலர் தங்கள் ஊழி யர்களை இன்றும் ஆளோட்டிகளைப் போல கடுமையாக நடத்துகின்றார்கள். சில இடங்களிலே, மேற்பார்வையாளர் அல்லது முகாமையாளர் என்று சொன் னாலே போதும், சிலர் பயந்து நடுங் குவார்கள். அன்றைய நாட்களிலே, வேலைக்கமர்த்தப்பட்டவர்கள் இரட்சிப் படைந்தவுடன், கிறிஸ்துவுக்குள் நாங் கள் ஒன்றாய் இருக்கின்றோம் என்று தங்கள் எஜமானனுக்கு கீழ்ப்படிவதை அற்பமாக எண்ணினார்கள். இன்று, நாங்கள் கிறிஸ்துவுக்குள் ஒன்றாய் இருக்கின்றோம், அல்லது வேறு பிரிக்கப்பட்ட பரிசுத்த ஜாதி என்று கூறி எங்களை நடத்துகின்ற வர்களை  அற்பமாக எண்ண முடியாது. ஒரு வேளை எங்களை நட த்துகின்றவர்கள் இரட்சிக்கப்பட்டவர்களாகவோ அல்லது கிறிஸ்துவை அறியாதவர்களாகவோ (வீட்டில், வேலையில்) இருக்கலாம், எப்படி யாக இருந்தாலும் எங்கள் மேற்பார்வையாளர்களை அற்பமாக எண்ணி விடமுடியாது. தேவனுக்கு எதிராக காரியங்களை செய்யும்படி பணிக்கின்றவர்களுக்கு நாங்கள் உடன்பட முடியாது. மற்றும்படிக்கு எங்கள் நன்நடக்கையை கண்டு, எங்கள் மேற்பார்வையாளர்கள், (வேலையிலோ, சபையிலோ, வீட்டிலோ) இவர்கள் உத்தமர்கள், இவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள், இவர்கள் நம்பத்தக்கவர்கள், இவர்கள் கீழ்ப்படிவுள்ளவர்கள் என்று சாட்சி கொடுக்கும்படிக்கு தேவனுடைய பிள்ளைகள் வாழ்ந்து காண்பிக்க வேண்டும். 

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, தாழ்மையுடனும் கீழ்ப்படிவுடனும், எங்கள் நன்நடக்கையால் உம்முடைய நாமம் மகிமைப்படும்படி நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ கிருபை புரிவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன். 

மாலைத் தியானம் - கொலோ 3:22-25