புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 18, 2018)

என் ஆத்துமா எங்கே போகும்?

யோவான் 3:16

தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசு வாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகா மல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவ ரைத் தந்தருளி, இவ்வள வாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.


இந்த உலகத்திலே பிறந்த மனிதர்கள் யாவரும் ஒரு நாள் மரிக்க வேண்டும். இது சரீரத்தில் அடையும் மரணம். மனிதனுக்குள் இருக்கும் ஆத்துமா எங்கே போகும்? நீங்களும் நானும் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், யாவரின் ஆத்துமாக்களும் பாதாளத் திற்கு செல்லும்படியான (நித்திய மரணம்) நிலைக்கு தள்ளப்ப ட்டாயிற்று. ஏன் அப்படி ஆயிற்று? இந்த பூமியில் உருவாக்கப்பட்ட முதல் பெற்றோர் (ஆதாம் ஏவாள்), பிசாசானவனுக்கு கீழ்ப்படிந்ததால், தங் களுக்குள் இருந்த மகிமையை (தேவ சாயல்) இழந்து போனார்கள். பிசா சானவனிற்கு அடிமையானார்கள். என்னுடைய ஆத்தமாவின் நிலை என்ன? மனிதர்கள் யாவரும் ஆதிபெற்றோர் வழி வந்தவர்கள். அதற்குள் நானும் நீங்களும் அடங்கி உள்ளோம். அவர்க ளுக்குள் இருந்த பாவவித்து அவர்கள் வழி வந்த மனிதர்கள் யாவரையும் நித்திய மரணதிற்குள்ளாக்கியது. இந்த நித்திய மரணத்திலிருந்து எப்படி மனிதர்கள் விடுதலை (இரட்சிப்பு) அடைய முடியும்? நித்திய மரணத்திலிருந்து விடுதலையடையும் ஒரே வழி “இயேசு”. யார் இந்த இயேசு? மனித குலத்தின் மீட்பர். தேவனுக்கு சமமாக இருந்தும், பரலோகத்தை துறந்து, இந்த பூமியிலே மனிதனாக வந்து, மனித குலத்தின் பாவத்தை தன்மேல் சுமந்து, சிலுவையிலே மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். தன்னுடைய பரிசுத்த இரத்தத்தினாலே மீட்படையும் வழியை உண்டு பண்ணினார். பாவத்திலிருந்து மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்? இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும். எப்படி ஏற்றுக் கொள்வது? இயேசுவே நீர் என்னுடைய பாவத்திற்காக சிலுவையிலே மரித்து, உம்முடைய பரிசுத்த இரத்தத்தினாலே என்னை மீட்டுக் கொண்டீர் என உள்ளத்தில் விசுவாசித்து, உங்கள் வாயினால் அறிக்கையிடுங்கள். நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் என இயேசு உங்களை வழிநடத்துவார்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, என்னை மீட்பதற்காக நீர் அனுப்பிய உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவுக்காக நன்றி! நான் இன்று என் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைக்கின்றேன். நீர் என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:6

Category Tags: