புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 17, 2018)

காவலில் இருப்போருக்கு விடுதலை

ஏசாயா 35:4

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.


சிறைக்குள் அடைபட்டிருக்கும் கைதி, விடுதலையாகும் வழியை அறிந்தும், அதைக் குறித்த நாட்டம் இல்லாதிருப்பானாக இருந்தால், அந்த கைதியை பற்றி என்ன கூறுவீர்கள்? சிறை என்று கூறும்போது மனிதர்கள் சட்ட விரோத நடவடிக்கைகளால் அரசாங்கத்தினால் தடுப்பு காவலில் இருக்கும் மனிதர்களை மட்டும் எண்ணிக் கொள் வார்கள். பல மனிதர்கள், பலவிதமான பாவக் கட்டுக்களால் கட்ட ப்பட்டு அடிமைத்தன வாழ்க்கை வாழ் கின்றார்கள். அந்த அடிமைத்தன த்தை ஏற்றுக் கொள்ள கூட முடியா மல், பலரின் மனக்கண்கள் குருடா க்கப்பட்டிருக்கின்றது. குடும்பப் பிரச்ச னைகள், குடிவெறி, போதைவஸ்து, மோக பாவம், சண்டைகள் இப்படி யாக பலவிதமான சிறையிருப்பின் வாழ்க்கைக்குள்ளே அகப்பட்டிருக்கி ன்றார்கள். இந்த அடிமைத் தனத்திலி ருந்து விடுதலை தரும்படியாகவே இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, எங்கள் பாவங்களை தான் ஏற்றுக் கொண்டு, அதற்குரிய பரிகா ரத்தை செலுத்தும்படி, சிலுவையிலே எனக்காகவும் உங்களுக்காகவும் மரித் தார். பாவத்தின் சம்பளமாகிய மரண த்தை ஜெயித்து, மூன்றாம் நாள் உயிர்த்து, பரலோகத்திலே பிதாவின் வலதுபாரிசத்திலிருந்து, எனக்காவும் உங்களுக்காகவும் பரிந்து பேசி ஜெபிக்கின்றார். இன்று சட்டவிரோதமான நடவடி க்கைகளால் தடுப்பு காவலில் தனித்திருந்தாலும், பாவ பழக்கங்களின் அடிமைத்தனத்திலி ருந்து வெளிவரமுடியாதபடிக்கு தவித்துக் கொண்டிருந்தாலும், இயே சுவை நோக்கி கூப்பிடுங்கள். இயேசுவே எனக்கு விடுதலை தாரும் என்று கேளுங்கள்! அவர் நிச்சயமாக விடுதலை தருவார். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துவார். நீங் கள் எங்கிருந்தாலும், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தேவ வார்த் தையை அறிக்கையிட்டு, பின்வரும் ஜெபத்தை ஏறெடுங்கள்.

ஜெபம்:

பரலோகத்திலிருக்கின்ற பிதாவே, பாவ கட்டுகளிலிருந்து விடுதலையடையாமல் இளைத்துப் போனேன். உம்மிடத்தில் விடுதலை உண்டு என விசுவாசிக்கின்றேன். இன்று நீர், என் உள்ளத்தில் எழுந்தரு ளும்படியாய் அழைக்கின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28