புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 03, 2018)

விண்ணப்பப் பட்டியல்

மத்தேயு 6:10

உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக


நேற்றைய நாளில், நீதியின் கிரியைகளுக்குரிய பலனை பற்றித் தியானித்தோம். இன்றைய நாளில், எங்கள் விண்ணப்பங்களின் பட்டி யலை சற்று ஆராய்ந்து பார்ப்போம். தேவைகளோடும், விண்ணப்பங்க ளோடும் தேவனுடைய பாதத்தை சேருவதில் எந்தத் தவறுமில்லை. எங்கள் தேவைகள் இன்னதென்றும், அவைகள் சந்திக்கப்படவேண்டிய முன்குறித்த காலத்தையும் கர்;த்தர் அறி வார். வேதத்திலே காணும் சில பரிசு த்தவான்களின் வாழ்க்கையை சற்று ஆராய்ந்து பார்ப்போமென்றால், ஸ்தேவான் என்னும் தேவனுடைய ஊழி யக்காரன், இயேசுவின் நற்செய்திக் காக, ஊர் ஜனங்களுக்கு முன்பாக, கல்லெறிந்து கொல்லப்பட்டான். அதாவது, இந்த மனிதன், தன்னுயிரையே கர்;த்தரின் பணிக்காக கொடுக்க சற் றும் தயங்கவில்லை. யூத மதத் தலை வர்கள், கல்லெறியும் போது, தன் உயிர்போகும் தறுவாயில், அவன் கர் த்தரிடம் விண்ணப்பம் பண்ணி, தேவனே, இவர்கள் அறியாமல் செய்கின்றார்கள் இவர்களை மன்னியும் என்று கூறி, தன் ஆவியை கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்தான். இந்த உலகத்திலுள்ளவைகளை தான் தேவனிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படி விண்ணப்பம் செய்யா மல், தன்னிடம் உள்ள யாவற்றையும் தேவனுக்கென்று ஒப்புக்கொ டுத்தான். இப்பொழுது, எங்களுடைய விண்ணப்பங்களை ஆராய்ந்து பார்த்தால், இந்த உலகத்திலிருக்கும் ஆசீர்வாதங்களை, எங்களுடைய சுய நன்மைக்காக, தேவனிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படியான விண்ணப்பங்களாகவே இருக்கின்றது. உபத்திரவம் வேண்டாம், க~; டம் வேண்டாம், பாடுகள் வேண்டாம் ஆனால், எங்கள் வாழ்க்கைப் படகில் எப்போதும் மிருதுவான தென்றல் வீச வேண்டும் என்றே பலர் விண்ணப்பிக்கின்றார்கள். எனவே, அப்படிப்பட்ட மனநிலையை எங்களில் வளர விடாமல், தேவனுடைய சித்தம் நிறைவேறும்படி என் வாழ்க்கையை தேவனிடம் அர்ப்பணித்து, விண்ணப்பிக்க வேண்டும். தேவன்தாமே, எங்கள் தேவைகளை எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்கி நடத்துவார்.

ஜெபம்:

மகிமை நிறைந்த தேவனே,; என் சுகபோகங்களை குறித்த எண்ணங்களை என்னை விட்டு அகற்றி, என்னைக் குறித்ததான உம்முடைய திருச்சித்தம் என்னில் நிறைவேறும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:15-17