புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 01, 2018)

எச்சரிப்பின் தொனி

1 தெச 5:4

சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக நீங்கள் அந்த காரத்திலிருக்கிறவர்களல்லவே.


கர்த்தர்தாமே, தீர்க்கதரிசியாகிய எசேக்கியலை நோக்கி:  மனுபுத்தி ரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்ல வேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணு கையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழை த்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு, இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக் கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச் சரிக்கும்போது, எக்காளத்தின் சத்தத் தைக் கேட்கிறவன் அதைக் கேட் டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டா னால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும். அவன் எக்கா ளத்தின் சத்தத்தைக்கேட்டும், எச்சரி க் கையாயிருக்கவில்லை. அவனுடைய இரத்தப்பழி அவன்பேரிலே சுமரும்; எச் சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவ னைத் தப்புவித்துக்கொள்ளுவான். காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படா மலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளு கிறது உண்டானால், அவன் தன் அக்கிரம த்திலே வாரிக்கொ ள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன். இன்றும் தேவனுடைய சத்தம் பல வழிகளிலே ஒலிக்கின்றது. நாங்கள் எங்கள் செவிகளை அடைத்து, கிருபையின் நாட்களை எங்கள் சொந்த விருப்பப்படி கழிக்காமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தேவ செய்திகளை அற்பமாக எண்ணாதிருங்கள். சபை ஒன்று கூடல்களை களியாட்டமாக்கிவிடாதிருங்கள். கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது. அந்த நாள் கண்ணியைப் போல எங்கள் மேல் வராதபடிக்கு, இன்று தேவனுடைய எச்சரிப்பின் சத்தத் திற்கு கீழ்ப்;படிந்திருப்போம். தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்கு வார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவா ர்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசு வாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கை யென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.

ஜெபம்:

கிருபையுள்ள நல்ல ஆண்டவரே, உம்முடைய வார்த்தைகளை கேட்டும் உணர்வற்றவனை(ளை)ப் போல வாழாமல், உம்முடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து, விழிப்புடன் ஜீவனம் பண்ண என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - செப்பனியா 1:14-18