புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 18, 2018)

நாட்கள் வீணாய் போகும் முன்னே..

பிரசங்கி 12:1

நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும்,


வாழ்நாட்களை களிப்புடன் கழிக்க வேண்டும் என்ற மனப்பான்மை யுடன் வாழ்ந்த வாலிபன் தனக்கென அநேக நண்பர்களை சேர்த்துக் கொண்டான். வார இறுதி நாட்களிலும், விடுமுறைநாட்களிலும் மதுபான ம்பண்ணி, வெறிகொண்டு, ஆடல்பாடல்களுடன் பல வருடங்கள் கழி ந்து போயிற்று. இந்த உலகில் எந்த ஒரு காரியத்தையும் இலகுவாக நடப்பிக்கும்படியாக இவன் நண்பர்கள் ஆதரவாயிருந்தார்கள். காலம் செல்லச் செல்ல உடலிலிருந்த பெலன் குன்றிப் போக ஆரம்பித்தது, படிப்படியாக வருத்தமுற்று, இனி ஒரு சொட்டு மதுபானம் அருந்தி வெறிகொள்ளமு டியாத அளவிற்கு அவன் வியாதி அவனை அழுத்தியது. இனி இவனி டம் களியாட்டம் இல்லை என்று உண ர்ந்த நண்பர்கள், களியாட்டமடையும் படியாக வேறு மனிதர்களை தேடினா ர்கள். படுக்கையில்; இருக்கும் இவ னுக்கு ஆதரவளிக்க ஒருவனும் இல்லை. கூடிக்களித்தவர்கள், இவன் தன் வாழ்வை களியாட்டத்தில் அழித்தான் எனவும் நகைத்தார்கள். பிரியமானவர்களே, நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் நண்பர்களும் ஆதரவாளர்களும் உங்களிடமிருந்து எதை விரும்புகின்றார்களோ, அவர்கள் அதையே எப்போதும் நாடித் தேடுவார்கள். எல்லா மனித ர்களும், பெலனற்று, படுகுழியில் வீழ்ந்து மாய்ந்து போக வேண்டும் என்பதே பிசாசின் தந்திரமாயிருக்கின்றது. நீங்கள் உங்கள் சொந்த வழிகளில் நடக்க தீர்மானிக்கும்போது, அதன் முடிவை சிந்தித்து உணர முடியாதபடிக்கு,  சுயவிருப்பத்தின்படி வாழும் படியாகவே, இந்த உலக போக்கில் வாழும் மனிதர்கள், உங்களுக்கு அறிவுரை கூறுவார்கள். நீங்கள் சென்ற வழிகளில் அழிவை காணும்போதும், காரிருள் சூழ்ந்து கொள்ளும் போதும், அவற்றிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள அவர்கள் உங்கள் பக்கம் இருக்கப் போவதில்லை. எனவே உங்கள் உடலில் பெலனும், சிந்திக்கும் ஆற்றலும் இருக்கும் போதே, உங்கள் வழிகளை சீர்ப்படுத்திக் கொள்ளும்படி தேவனிடம் திரும்புங்கள்.

ஜெபம்:

கிருபையுள்ள கர்த்தாவே, இந்த உலகப் போக்கில் வாழ்ந்து, சமாதானத்தை இழந்து, பெலனற்றுப்போய், படுகுழியில் விழுந்து போகும் முன் உம்மை நாடித்தேடும் உள்ளத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 55:6