புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 16, 2018)

குறித்த நேரத்திற்கு காத்திருங்கள்

எண்ணாகமம் 23:19

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?


ஒரு தேசத்தின் அரசன், வருடாவரு~ம், தன் ஆளுகைக்குட்பட்ட ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இப்படியாக அவன் ஊருக்கு சென்ற போது, ஒரு ஏழைக் குடியானவனின், துன்பமான வாழ்க்கை நிலையை அறிந்து கொண்டான். “குறித்த காலத்திலே உனக்குரிய வைகள் பார்த்துக் கொள்ளப்படும்” என்று கூறி, அரண்மனைக்கு திரும்பினான். அநேக மாதங்கள் சென் றும், அரசனிடமிருந்து, எந்த ஒரு செய்தியும் வரவில்லை. எனினும், அந்த ஏழைக் குடியானவன், அரசனின் வார்த்தையை நம்பி, பதிலை எதிர்பார் த்து, பொறுமையாக தன் நாளாந்த விவகாரங்களை செய்தபடியே செய்து வந்தான். சுற்றத்தார், அவனை பார் த்து, நகைத்தார்கள், சிலர் பரிதாபப்ப ட்டார்கள். அரசன் தன் கால அட்டவ ணையில் குறித்த நாள் வந்தபோது, தான் சொன்ன வார்த்தையின்படி, அந்த ஏழைக் குடியானவனுக்கு அநு க்கிரகம் செய்தான். பிரியமானவர்களே, எங்கள் நம்பிக்கையின் நிலையை நாங்கள் அவ்வப்போது ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்டவர் களுக்குரிய உரிமைகள் என்னவென்று பரிசுத்த வேதாகமத்திலே வாசி க்கின்றோhம். அந்த வார்த்தைகள் வாசிப்பதுடன் அல்லது கேட்பதுடன் விட்டுவிடாமல், தேவ வார்த்தைகளை நம்பி, தேவனுடைய நேரத்தி ற்கு பொறுமையோடு காத்திருங்கள். தேவனுடைய ஆளுகையில், அவர் குறித்த கால அட்டவணையின்படி, எங்களுக்கென முன்குறித் தவைகளை நிச்சயமாக நிறைவேற்றி முடிப்பார். சுற்றத்தார், எங்க ளைப் பார்த்து நகைக்கலாம் அல்லது எங்கள் நிலையை குறித்து பரி தபிக்கலாம். அதைக் கண்டு கலங்கி, அவர்களுக்கு எதிராக பதிலடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தேவனுடைய வாக்குத்தத்த ங்களை தினமும், அறிக்கையிட்டு அதை பற்றிக் கொண்டிருங்கள். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள  தேவனே, உம்முடைய ஆளுகையில் நீர் முன்குறித்தவைகளை ஒருவரும் மாற்ற முடியாது. உம்முடைய சித்த த்திற்கு என்னை ஒப்புக் கொடுத்து, உம்முடைய நேரத்திற்கு காத்திரு க்கும் பொறுமையைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:1-11

Category Tags: