புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 08, 2018)

தமக்கெனத் தெரிந்து கொண்டார்

எபேசியர் 1:4

தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,


பரிசுத்த வாழ்வுவாழும்படியாக நாங்கள் வேறு பிரிக்கப்பட்டிருக் கின்றோம். இந்தப் பரிசுத்தம் எங்கள் வாழ்க்கையின் முறையினாலே வெளிப்படுத்தப்படவேண்டுமே தவிர மற்றவர்களை குற்றப்படுத்து வதால் வெளிப்படுத்தப்படுவதில்லை. பாடசாலையில் படிக்கும் நாட் களில், சில மாணவர்கள், எப்போதும், மற்றவர்களின் குற்றங்களை ஆசிரியருக்கு வெளிப்படுத்துவதால், தாங்கள் நல்லவர்கள் என்று காண்பித்துக் கொள்வார்கள். அப்படி யாக அல்ல, தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தம், எங்கள் வாழ்க்கையில் அன் புடன் நற்கனிகளால் வெளிப்படுத்தப்ப டவேண்டும். தாவரங்களிலே, “காஞ் சொறி” என்னும் இனம் புறம்பாக்கப்ப ட்டிருக்கும், அதை எப்போது தொட் டாலும்; சுணைத்துவிடும். எங்களைக் காணுவோர் பயந்து, விலகிப் போகும் படியாய் எங்கள் பேச்சுக்கள் இருக்கக் கூடாது. தேவனாகிய கர்த்தர் தாமே எங்களை காஞ்சொறித் தாவரமாக நாட்டவில்லை. இந்த உலகத்திலே மனி தர்கள், மனிதர்களை உலகத்தின் அள வுகோலின்படி  பல வகுப்புக்களாக  ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இது மனிதனுடைய ஏற்பாடு. அந்த மனித ஏற்பாட்டின்படி நீங்கள் எந்த நிலையிலும் இருக்கலாம், ஆனால் தேவன்தாமே மனிதர்களின் ஏற் பாடுகளின்படி எங்களை அழைக்கவில்லை. தேவன் எங்களை “முற்றிலும் நற்கனிதரும்” உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினார். எனவே நாங்கள் பலனற்ற காட்டுத்திராட்சச் செடியின் ஆகாத கொடி களாய் மாறிப்போகக்கூடாது. சுவையாக, உயர்ரக கனிகளை கொடு க்க வேண்டும். ஆராதனை வேளைகளில் மட்டும், பரிசுத்தம் என்று கூறுவதுடன் நிறுதித்திவிடாமல், உலகத்திற்கு ஒளிதரும் விளக் குகளாய் சுடர்விட வேண்டும். தீமைக்கு தீமை செய்யாமல், மற்றவ ர்கள் எங்களுக்கு தீமை செய்தாலும், எங்களிடம் இருந்து நற்கனிகளே வெளிப்படவேண்டும். மற்றவர்கள் காரணமின்றி வசைச் சொற்கள் சொன்னாலும், எங்கள் வாயிலிருந்து நற்கனியாகிய நல்ல வார்த் தைகளே வெளிவரவேண்டும். 

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, பரிசுத்த வாழ்வு நான் வாழ நீர் என்னை உமக்கென பிரித்தெடுத்தீர். அந்த பரிசுத்த வாழ்க்கையின் நற்கனிகளை மற்றவர்கள் மத்தியிலே சாட்சியாக காண்பிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 10:10-12