புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 03, 2018)

நியாயத்தை விதையுங்கள்

நீதிமொழிகள் 22:8

அநியாயத்தை விதைக் கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.


ஒரு ஊரிலே உள்ள சனசமுக நிலையத்தின் அடுத்த இரு வருடங்களுக்குரிய தலைவரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. தலைவருக்காக போட்டியிடும் அங்கத்தவர் ஒருவர், சனசமுக நிலை யத்தின் அங்கத்தவர் பலரை தனிப்பட்ட முறையில் அணுகி, தந்திர மாக அவர்களுடன் பேசி, தலைவர் பதவியை பெற்றுக் கொண்டார். சமுதாயத்தை நெறிப்படுத்தி, சேவை செய்பவர்களை நடத்தும் தலைவர் நெறிமுறையற்ற காரியத்தை செய்ய லாமா? இப்படியான காரியங்கள்,  தேச ங்களிலே, பல மட்டங்களில் நடைபெ றுவதை ஆங்காங்கே செய்திகளில் கேட் கின்றோம். இப்படிப்பட்ட செயல் முறை களை உலக போக்கில் வாழ்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். மனு~ன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். அநீதியான முறையில் ஒரு வி~ய த்தை செய்துமுடிப்பவன், இன்னுமொரு அநியாயத்தை நடப்பிப்பதற்கு பின் நிற்கமாட்டான். இவர்கள் எவ்வளவு உயரமாக தங்கள் சிங்காச னத்தை உயர்த்திக் கொண்டாலும், எவ்வளவாக தங்கள் ஐசுவரிய த்தை பெருக்கி, இந்த உலகிலே பெயரும் புகழுடனும் வாழ்ந்தாலும், இவர்கள் உள்ளத்தில் தேவ சமாதானம் தங்குவதில்லை. சர்வவல்ல மையுள்ள தேவன் யாவற்றையும் அறிந்திருக்கின்றார். அநியாயத்தை விதைக்கிறவன் குறித்த காலத்திலே வருத்தத்தை அறுப்பான்;. ஆதிக் கங்கள் யாவும் அடங்கிப்போகும் காலம் உண்டு. அவைகளை நியா யந்தீர்ப்பது எங்களுக்குரியதல்ல. ஆனால், அநியாயத்தையும் அதன் முடிவையும் குறித்து அறிந்த நாங்கள், எங்கள் மட்டங்களிலே, நாங் கள் பங்கெடுக்கும் விடயங்களிலே, எப்படிப்பட்ட அநியாயத்திற்கும் இடங் கொடுக்கக் கூடாது. வீட்டில், வேலையில், பாடசாலையில், நண்பர் உறவினர் மத்தியில், வெளியிடங்களிலும், சபை போன்ற இட ங்களிலும், நெறிமுறையற்ற விடயங்களுக்கு நாங்கள் உடன்படக் கூடாது. நாங்கள் நீதியின் பலனை அறுக்கும்படி, தேவ சத்தத்திற்கு செவி கொடுத்து, அதன்படி வாழ்வோம். உத்தமமாய் நடந்து, தேவ நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுவோம்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, நியாயம் நடப்பிக்கப்பட வேண்டும் என்று அநியாயத்தின் கிரியைகளுக்கு உடன்படாதபடி, உம்முடைய வார்த்தை யின்படி நீதியின் கிரியைகளை நடப்பிக்க கிருபை செய்யும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:7

Category Tags: