புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 26, 2018)

அளக்கும் அளவுகோல்

மத்தேயு 7:1-5

நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.


ஒரு வாலிபன், பல மனிதர்கள் முன்னிலையிலே, தன் கிரா மத்திலுள்ள மூத்த உறுப்பினருக்குரிய கனத்தை கொடுக்காமல், அவர் அவமானடையும்படி அவரைக் கடிந்து கொண்டான். சில மாதங்களுக்கு பின், அந்த வாலிபன் பயங்கரமான மோட்டார் வண்டி விபத்தொன்றில் அகப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். கிராமத்திலுள்ள பலர், இவனுடைய வாய்க்கு கடவுள் இதை இவனுக்கு அனுமதித்தார், இவனுக்கு நல்ல பாடம் இது என்று அவனை நியாயந்தீர்த்தார்கள். கேட்பதற்கு இந்த சம்பவம் சரிபோல தோன்றலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள்! கிராமத்திலுள்ள ஒவ்வொருவரின் பேச்சுக்கும் கடவுள், உடனடியாக தண்டனை கொடுக்க ஆரம்பித்தால், அந்தக் கிராமத்தில் யார்தான் உயிர்வாழக்கூடும். சில சமயங்களிலே, தேவனை நம்பி வாழ்பவர்களுடைய வாழ்க்கையிலே, துன்பங்கள் வருவதுண்டு. அதன் காரணத்தை பலரும் பலவிதமாக வர்ணிக்கலாம், ஆனால் எப்படி மற்றவர்களுடைய வாழ்க்கையை நாங்கள் வர்ணிக்கின்றோமோ, அதே அளவினாலே எங்களுக்கும் வர்ணனை செய்யப்படும். தேவன் அறியாமல், எங்கள் தலையில் இருக்கும் ஒரு முடி கூட தரையிலே விழுவதில்லை. நாகோமி, தன் கணவனையும், இரண்டு குமாரர்களையும் இழந்து, தன் மருமகளாகிய ரூத் என்பவளுடன் வரும்போது, சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்ட ளையிட்டார் என்று கூறினாள். அவள் தேவனை விட்டு விலகவில்லை.  அவர் கொடுத்த பாத்திரத்தை ஏற்றுக் கொண்டாள். சில வேளைக ளிலே தேவனுடைய பிள்ளைகளின் வாழ்வில் கசப்பான பாத்திரத்தில் பருகும்படி தேவன் அனுமதிக்கின்றார். அந்தப் பாத்திரம் தேவனி டத்திலிருந்து வந்ததுண்டானால், அந்தப் பாத்திரத்தில் பருகுங்கள். கர்த்தர் உங்களுக்கு பெலன் தருவார். இந்த பூமியிலே எங்கள் வாழ்க்கை முடிந்;துவிட்டது போல தோன்றலாம் ஆனால் இயேசுவை நம்பி வாழ்பவர்களின் வாழ்வு இந்த பூமியோடு முடிந்து போவதில்லை. எனவே, நன்மையை கண்டடையும்படி உங்கள் அளவுகோலை கர்த்தர் முன்னிலையில் சரியாக்கிக் கொள்ளுங்கள். 

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, உம்முடைய ஆளுகைக்கு முடிவில்லை, அதை உணர்ந்து,  நான் மற்றவர்களை அளக்கும் அளவை உம்முடைய வாக்கின்படி சரிப்படுத்திக் கொள்ள எனக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தாரும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:1-5