புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 20, 2018)

யார் ஏற்றுக் கொள்ளப்படுவான்?

யோவான் 15:4

நீங்களும்   என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.


சாலையின் தாழ்விடத்திலே வாழ்ந்து வந்த குடும்பம், பல துன்மார்க்கமான வழிகளிலே தங்களை கெடுத்துக் கொண்டிருந்தார்கள். குடிவெறியிலும், தகாத தீய பழக்கங்களாலும் நிறைந்திருப்பதை யாவரும் காணக்கூடியதாக இருந்தது. தங்கள் வழிகளை குறித்து உணர்வற்றவர்களாக இருந்தார்கள். இவர்களை விட்டு தூரமாக வாழ்வதையே மனிதர்கள் விரும்பினா ர்கள். சாலையின் மறுபக்கத்திலே வாழ்ந்த இன்னுமொரு குடும்பம், கல்வி, சமுக அந்தஸ்து, ஐசுவரியம் நிறைந்தவர்களாக வாழ்ந்து வந்தார் கள். துன்மார்க்கமாய் வாழ்ந்து வரு வோரையும் அவர் பழக்கவழக்கங்க ளையும் இவர்கள் அருவருத்தார்கள். பரம்பரை பரம்பரையாய் ஊரிலே வாழும் உத்தமர்கள் நாங்கள் என்னும் பெருமை இவர்களிடம் இருந் தது. எல்லா மனிதர்களும் இவர்களுக்கு சலுகை செய்ய ஆயத்தமாக இருந்தார்கள். இந்த இரு குடும்பங்களின் நிலைகளையும் சிந்தித்துப் பாருங்கள். வெளியரங்கமாக தோன்றும் களவு,  பொய், விபசாரம் போன்றவைகள் மட்டும் தான் தேவனுக்கு எதிரான பாவமா? மேட்டி மையான கண்களையும் தேவன் அருவருக்கின்றார். பெருமையுள்ள வர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கின்றார். தன் பார்வையிலே தான் நீதிமான் என்று எண்ணுகின்றவன் மனம்திரும்புதலைக் கண்ட டைவானோ? துன்மார்க்கமாக வாழ்பவனும், உலக சன்மாரக்கமாக வாழ்பவனும் பரலோகம் செல்ல வேண்டுமென்றால், முதலாவதாக அவன் தன்னைத் தாழ்த்தி, இயேசு வழியாக பாவத்திலிருந்து மீட் பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உலக நீதியின்படி ஏற்றுக் கொள்ளப்பட்டவரும், சுயநீதியின்படி பரிசுத்தவான்களும் தங்கள் கிரியைகளால் மீட்படைய முடியாது. துன்மார்க்கன் தன் வழிகளை விட்டு மனந்திரும்ப வேண்டும். எனவே உங்கள் வழிகளை ஆராய்ந்து பார்த்து கர்த்தராகிய இயேசுவிடம் திரும்புங்கள். எந்த மனிதனும் இயேசுவில் நிலைத்திராவிட்டால், அவன் எந்த கிரியைகளை செய்தாலும், எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும். வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்

ஜெபம்:

நீதியுள்ள தேவனே,  என்னுடைய சுய நீதியிலே நான் மூழ்கி திருப்தியடையாதபடிக்கும்,  இயேசுவில் நிலைத்திருந்து,  அவருடைய வார்த்தையின்படி வாழ்ந்து நற்கனிகளை கொடுக்க என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 12:30