புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 07, 2018)

எங்கள் பலவீனங்களை அறிந்தவர்

நாகூம் 1:7

கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.


நகரத்திற்கு தொலைவிலுள்ள ஊருக்கு சென்று, அங்கே எங்கள் வியாபார ஸ்தலம் ஒன்றை ஆரம்பிக்கும்படி நீ அங்கு சென்று, சில மாதங்கள் தங்க வேண்டும் என தன் மகனிடம் கூறினான். அந்த ஊருக்கு சென்றால், தற்போது தனக்கிருகின்ற சௌகரியங்கள் எல் லாம் போய்விடும் என்று மனதில் யோசித்து, “அப்பா, இந்த வேலை எங்கள் வியாபார முன்னேற்றத்திற்கு  முக்கியமானது,  எனவே, இந்த விவகாரங்களை திறம்பட செய்யக்கூடியவன் என்னுடைய அண் ணன். அவனையே அங்கே அனுப்புவது நல்லது என்றான்.” இந்த இளைய மகன் தன் மனதிலே ஒன்றை வைத்து, வெளியே வேறொன்றைப் பேசினான்.  மீதியானியராலே இஸ்ரவே லர் மிகவும் துன்பப்படுத்தப்பட்ட போது, அவர்களை மீட்கும் பொரு ட்டு, கர்த்தர்தாமே கிதியோன் என்னும் மனிதனை அழைத்தபோது, தன்னு டன் பேசுகிறவர் கர்த்தர்தானோ என்ற உறுதிப்படுத்தும்படி, கர்த்தரிடம் சில அற்புதங்களை செய்யும்படி கேட்டான்.  கிதியோனுடன், தெரிந்து கொள்ளப்ப்ப ட்ட 300 வீரர்களுடன், நான் உங்களை இரட்சித்து, பெருங்கூட்டமான மீதியானியரின் படையை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்,  நீ எழுந்து, அந்தச் சேனையினிடத்திற்குப் போ, அதை உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்.  போகப் பயப்பட்டாயானால், முதல் நீயும் உன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையினிடத்திற்குப் போய்,  அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்: பின்பு சேனையிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்று கர்த்தர் கூறினார். அப்படியே கிதியோன் சென்று மீதியானியர் எவ்வளவு கலக்கம் அடைந்திருக்கி ன்றார்கள் என்று திடமாக அறிந்து கொண்டான். ஆம்! நாங்கள் ஆரா திக்கும் தேவன் எங்கள் நிலையை நன்கு அறிந்தவர். எங்கள் பல வீனங்களை அவர் காண்கின்றார். அவற்றை மேற்கொள் ளும்படி வழியை உண்டுபண்ணு கின்றார். தம்முடைய கிருபையை அளிக்கி ன்றார். ஆனால் நாங்கள், கர்த்தருக்கு முன்பாக உண்மையுள்ளவர் களாக இருக்க வேண்டும். உண்மை நிலையை அவரிடம் கூறி, அவ ருடைய வழிநடத்துதலுக்கு கீழ்ப்படியும் போது வெற்றியைத் தருவார்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே,  உள்ளத்தில் உண்மையாயிருக்கிறவர்களிடத்தில் நீர் பிரியமாக இருக்கின்றீர். மனதார உண்மையைப் பேசி, உம்முடைய வழிடத்துதலைப்பெற்று, அதற்கு கீழ்ப்படிய என்னை வழிநடத்தும்.  இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 25:4-6