புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 26, 2018)

புதிய வாழ்க்கை!

ரோமர் 12:21

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.


தன்னுடைய பழைய வாழ்க்கையை களைந்து, கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்த மனிதன், ஒரு நாள், தன் அயலவன் ஒருவனை நோக்கி: என்னை யார் என்று உனக்குத் தெரியும்தானே, என்னுடைய பழைய மனு~னை திரும்ப கொண்டுவர வைக்காதே என்று கூறினான். அயலில் வாழ்பவன் தகாத வார்த்தைகளை பேசியது உண் மையாக இருக்கலாம் அல்லது தீமை செய்திருக்கலாம். இப்படியான சூழ்நி லைகளிலே, கிறிஸ்துவை இரட்சகராக அறிவதற்கு முற்பட்ட காலங்களிலே, எப்படி பதிலடி கொடுப்பது என்று நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனு~ன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திரு க்கிறோம். இப்பொழுது இப்படிப்பட்ட தீமைகளை மேற்கொள்ளு வதற்கு, மரித்துப்போன பழைய மனு~னுக்கு (சுபாவங்களுக்கு) புத்துயிர் கொடுத்து, அவற்றை உயிர்தெழச் செய்யத் தேவையில்லை. இப்பொழுது எங்களை நோக்கி வரும் பொல்லாங்கனின் அக்கி னியாஸ்திரங்களையெல்லாம், எங்களுக்குள்ளே வாசம் செய்யும் தூய ஆவியானவரின் வழிநடத்துதலின்படியே தகர்த்தெறிய வேண்டும். எப் படியாக எங்கள் இரட்சகராகிய இயேசு பிசாசின் சோதனைகளிலிரு ந்து ஜெயம் பெற்றாரோ, அதே பிரகாரமாக நாங்களும் அவரைப்போ லவே வாழவேண்டும். சில வேளைகளிலே, உங்கள் பழைய வாழ்க் கையின் துன்மார்க்க சாகசங்களை சிலர் பெருமிதமாக உங்கள் முன் னிலையில் பேசிக் கொள்வார்கள். அவைகளில் மேன்மை ஒன்றுமி ல்லை. இவ்வாறான பேச்சுக்களை பேசுகின்றவர்களுக்கு ஊக்கமளிக் காதிருங்கள். எங்களுக்கு துரோகம் செய்கின்றவர்கள், புதிய மனு ~னுக்குரிய கிறிஸ்துவின் சுபாவங்களை எங்களில் காணும்படி சாட்சி உள்ள வாழ்க்கை வாழ வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பிதாவே,  நான் புதிய வாழ்க்கை வாழும்படிக்கு, பழைய அருவருப்புகளை கிருபையாய் மன்னித்தீர். மறுபடியும் பழைய வாழ்க்கைக்குள் போகாதபடிக்கு என் சிந்தையை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-12