புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 23, 2018)

கிறிஸ்துவின் மகிமையின் சாயல்

ரோமர் 8:29

தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;


உங்கள் தோற்றத்தைப் பார்த்தால்,  பிரபல்யமான அந்த விளையா ட்டு வீரர் போன்று இருக்கின்றது அல்லது உங்கள் முகரூபத்தைப்  பார்த்தால் அந்த நட்சத்திரம் போல இருக்கின்றது என மனிதர்கள் கூறும் போது, கேட்பவர்களின் மனதில் சந்தோ~ம் உண்டாகிவிடுகி ன்றது. சில வேளைகளிலே, உலகத்தில் புகழ்பெற்ற மனிதர்களின் வாழ்க்கை முறை, தேவ நியமங்களின் படி ஏற்புடையதாக அமையாவிட்டா லும், அவர்களுடைய சாயல் தங்க ளில் தெரிவதாக கூறும்போது அதை நிராகரிக்கமாட்டார்கள். இந்த உலக போக்கில் வாழும் கீர்த்தி பெற்ற மனி தர்களுடைய சாயல் அல்ல மாறாக, உங்கள் சுபாவத்தைப் பார்த்தால், இயேசுவைப் போல இருக்கின்றீர்கள் என்று மற்ற மனிதர்கள் எங்களை பார் த்து கூறுவதையே நாங்கள் வாஞ்சிக்க வேண்டும். அப்படி கூறும்போது எங்கள் சந்தோ~ம் மிகையாக இரு க்க வேண்டும். இயேசு என்னும் நாமம், இன்று பல நாடுகளில் பிரப ல்யமற்றதாகக் காணப்படுகின்றது. கிறிஸ்தவ பண்புகளின் அடிப்படை யில், கிறிஸ்தவர்களால் கட்டப்பட்ட நாடுகளில் ஆட்சி செய்யும் தலைவர்கள், தங்கள் ஆட்சிக் காலத்திலே, இயேசு என்ற நாமத்தை உச்சரிப்பதை தவிர்த்துக் கொள்கின்றார்கள். இந்த உலகில் உள்ள அற்ப இலாபத்திற்காக, நித்திய மேன்மையை வெறுத்துத்தள்ளும் மதியீனர்களாக பல மனிதர்கள் வாழ்கின்றார்கள். ஆனால், எங்களு டைய வாழ்க்கையில் எங்களை காணுவோர் “இயேசுவை” காணவேண் டும். எங்கள் பேச்சுகள், செயல்கள், மனதில் தோன்றும் சிந்தனைகள் யாவும் இயேசுவைப் போல மாற வேண்டும்.  அரசனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், கெட்டுப்போக விரும்புகிறவர்களுக்கு இயேசு என்னும் நாமம் பைத்தியமாகவும், நித்திய ஜீவனை விரும்புகிறவர்க ளுக்கு இயேசு என்னும் நாமம் தேவபெலனாகவும் இருக்கின்றது.

ஜெபம்:

உன்னதமான தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலில் வளர்வதன் மேன்மையை உணர்ந்து கொள்ளத்தக்கதான பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்தருளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - 2 கொரிந்தியர் 3:18