புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 21, 2018)

உலகத்தால் கறைபடாதபடிக்கு...

ரோமர் 12:2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத் திற்கு ஒத்த வேஷந்தரியாமல்.


தாமரைச் செடி, கர்த்தராகிய தேவனால் படைக்கப்பட்ட தாவரங்களில் ஒன்று. இந்தத் தாவரம், சேறுள்ள தண்ணீர்த் தடாகங்களில் வளர்கின்றது. இதன் வேர் சேற்றுப் பகுதியிலும், தண்டு தண்ணீருக்குள்ளும் வளர்ந்து அழகான பூக்கள் வெளியிலே வருவதை காணலாம். சூரியன் உதயமாகும் போது இது மலர்ந்து, சூரிய அஸ்தமனத்தின்பின் சுருங்கி  தண்ணீருக்குள் ஒரு மொட் டைப் போல இருக்கும். நாங்கள் இந்த உலகத்தில் வாழ்கின்றபோதிலும், இந்த உலகத்தின் போக்கில் வாழ்பவர்கள் அல்ல. அதாவது, மனிதர்களால் மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட நியமங்களி ன்படி யும், மனிதர்களுக்கு செம்மையாக தோன்றுகின்ற வழிகளுக்கும், நாங்கள் உடன்பட்டவர்கள் அல்ல. எனினும், இந்த சரீரத்தில் உயிர் உள்ளவரை இந்த உலகத்திலே வாழ வேண்டும். உயிர்வாழ்வதற்கு அடிப்படைத் தேவனை அவசியம். நாளாந்தம் நாங்கள், தேவனை அறிந்து அவருக்கு பிரியமாக வாழ்பவர்களுடனும், தேவனை அறியாதவ ர்களுடனும், தேவை அறிந்தும் அறியாதவர்களுடனும், தேவனை அறியவேண்டிய பிரகாரமாக அறியாதவர்களுடனும் இடைப்படுகின்றோம். இதை முற்றிலும் தவிர்த்துவிட முடியாது. எப்படித் தாமரை தனக்கு தேவையான வளங்களை சேற்றிலிருந்தும், தண்ணீரிலிருந்தும் பெற்று அழகிய பூக்களை தருகின்றது. மிகையான தண்ணீரிலும், சேற்றிலும் இருந்தாலும் பாதிப்படையாதபடி, இதற்கு சிறப்புத்தன்மை இருப்பது போல நாங்களும் இந்த உலகத்தால் கறைபடாதபடிக்கு, அதைப் போல, எங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை மட்டும், இந்த உலகிலிருந்து பெற்று, எங்கள் வாழ்க்கையை கண்டு மற்றவர்கள் பரம பிதாவை மகிமைப்படுத்தும்படி வாழ வேண்டும். கறைபடாமல் வாழ் வது, மனித பெலத்திற்கு அப்பாற்பட்டது எனவே உலகத்தின் கறை கள் எங்களை பற்றிக் கொள்ளாதபடி தூய ஆவியானவர்தாமே எங் களை அபிஷேகித்து, எங்கு செல்ல வேண்டும் என்ன செய்ய வேண் டும் என்று போதிக்கும்படி தேவனை வேண்டிக் கொள்ள வேண்டும். 

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, இந்த உலகத்திலே எங்கள் வாழ்க்கைக்கும் உமது சித்தத்தை நிறைவேற்றுவதற்கும் தேவையானதை மட்டும் பெற்று, உலகத்தால் கறைபடாமல் வாழ வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:27