புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 19, 2018)

கிருபையின் நாட்கள்

சங்கீதம் 119:11

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.


ஒரு ஊரிலே வசித்து வந்த ஐசுவரியவான், தன் பிள்ளைகளுக்கு வேண்டிய வசதிகள் யாவற்றையும் பூரணமாக கொடுந்து வந்தான். எனினும் அவனுடைய குமாரர்களில் ஒருவன், சில தீய நண்பர்களு டன் போக்கும் வரத்துமாக இருந்து வந்தான். தகப்பனோ தன்னால் முடிந்தவரைக்கும் அவனுடைய வாழ்வை நல்வழிப்படுத்த முயன்றான். ஆனாலும், அவனுடைய குமாரன், தக ப்பனிடமிருந்து பணத்தை பெறும்படியாய், சில நாட்களுக்கு, தகப்பனுக்கு பிரியமானவற்றை செய்வான், ஆனால் பணத்தை பெற்றபின்போ, தன் நண்பர்களிடம் சென்றுவிடுவான். நீங்கள் அந்த தகப்பனின் ஸ்தானத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்? எத்தனை ஆண்டு கள் அவனை நாட்டின் அதிகாரிகளி டத்திலிருந்து தப்புவிப்பீர்கள்? எத்தனை ஆண்டுகளுக்கு, அது என்னுடைய மகனின் தவறு அல்ல, அவனின் நண்பர்கள் சிலரின் சதி என்று கூறுவீர்கள்? இப்படியே அவனுடைய வாழ்க்கை தீமையான வழியிலே சென்று கொண்டிருந்தால் அதன் முடிவு எப்படியாயிருக்கும்? இப்பொழுது எங்களை அந்த குமாரனி டத்திலும், பிதாவாகிய தேவனை அந்த தகப்பனிடத்திற்கும் வைத்து சிந்தித்துப் பாருங்கள். நித்திய வாழ்வைப் பெறும்படியாக, பிதா வாகிய தேவன்தாமே, தம்முடைய சொந்த குமாரனாகிய இயேசுவை பலியாக ஒப்புக் கொடுத்திருக்கின்றார். இயேசு வழியாக மீட்பைத் தந்து, வழிகாட்டியாகிய பரிசுத்த ஆவியானவரின் அபிN~கத்தைத் தந்து,   வாழ்வு தரும் வசனங்கள் அடங்கிய வேதத்தை தந்து, இன்னும் பல வளங்களை தந்திருக்க, இன்னும் எங்கள் வாழ்க்கையில் விட்டுவிடமுடியாத தீமையான உறவுகள், பேச்சுக்கள், சிந்தனைகள், செயல்கள், காட்சிகள் இருக்குமாயின் அதன் முடிவு எப்படியாயிருக் கும்? தேவ கிருபையின் நாட்களை அசட்டை செய்யாதிருங்கள்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, இன்னும் என் வாழ்வில் நான் விட முடியாமலிருக்கும், உமக்கெதிரான உறவுகள், பேச்சுக்கள், சிந்தனைகள், செயல்கள் யாவற்றைம் விட்டுவிலகும்படிக்கு  என்னை வழிடத்தும்.  இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 6:1-13