புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 16, 2018)

இயேசுவை பற்றிக் கொள்ளுங்கள்

யோவான் 3:19

ஒளியானது  உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்பு க்குக் காரணமாயிருக்கி றது.


நாகரீகம், மனித உரிமை, அபிவிருத்தி என்ற போர்வையிலே பல தே சங்களிலே, தேவனுக்கு விரோதமான பாவச் செயல்கள் சட்டமாக்க ப்பட்டு வருகின்றது. பிதாவாகிய தேவன் தாமே எந்த மனிதனையும் தள்ளிவிடுகின்றவர் அல்ல. இந்த உலகத் தோற்ற முதல்  வாழ்ந்த மனிதர்கள் தம்மண்டை வந்து நித்திய வாழ்வை பெறவேண்டும் என் பதே அவருடைய நோக்கம். உலக த்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கு ம்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். ஆனால் திராட் சைசெடியிலே ஒட்டப்படாத கொடிகள் உலர்ந்து போவதைப் போல, இயேசு இல்லாமல் வாழ்பவனின் வாழ்க்கை யும் உலர்ந்துபோய்விடுகின்றது. இயே சுவை இரட்சகர் என்று அறிந்த நாடுக ளிலுள்ளவர்களும், இயேசுவை விட்டு தங்கள் பிள்ளைகளைத் தூரப்படுத்து கின்றார்கள். அந்த நாமத்தை பேசி னால், இந்த உலகத்திலே தங்களுக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு உண் டாகாது என்று, இயேசுவின் பூவுலக பிறப்பு, அவருடைய பாடுகள், மரணம், உயிர்த்தெழுதலின் நினைவு நாட்களில்கூட இயேசு என்ற நாமத்தை தவிர்த்துக் கொள்கி;ன்றார்கள். இவர்கள் இருதயத்தின் நினைவுகளும், அவர்களுடைய கிரியைகளும் பொல்லாததாக இருப் பதே இதற்கு காரணம் என்று இயேசு கூறியிருக்கின்றார். இவர்களை யும் இவர்கள் அந்தகாரத்தின் கிரியைகளையும் கண்டு சோர்ந்து போய்விடாதிருங்கள். இயேசுவை பற்றிக்கொண்டு, உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை பொறுமையோடு நிறைவேற்றுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, இந்த உலகிலே நடக்கும் விசுவாசத் துரோகமான செயல்களை நடப்பிக்கும் மனிதர்களின் வழிகளில் நான் இழுப்புண்டு போய்விடாதபடிக்கு என்னை காத்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 12:30