புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 15, 2018)

தம்மண்டை சேர்க்கும் இயேசு

மத்தேயு 12:20

அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.


இயேசு இந்த பூமியிலே வாழ்ந்த நாட்களில் இருந்த சில யூதமதத் தலைவர்கள் சுமக்க முடியாத பாரங்களை அற்பமானவர்கள் மேலும், எளிமையானவர்கள் மேலும் சுமத்தினார்கள். இதனால் ஜனங்கள் ஒடுக்கப்பட்டார்கள். மனிதர்களுடைய வாழ்க்கையிலே அன்பு, பாசம், இரக்கம், மனதுருக்கம் என்னும் பதங்களுக்கு இடமில்லாமல் போயி ற்று. எண்ணெய் இல்லாமல், திரிக ருகி மங்கி எரியும் விளக்கை வெளி யிலே எறிந்து விடுவது போல மனிதர் களுடைய வாழ்வும் அற்பமாக இருந் தது. ஆனால் எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ, சிராய்க்கப்ப ட்டு இருக்கும் நாணல் புல்லைக் கூட உடைத்துப்போடமாட்டார்.  சில வேளை களிலே சில மனிதர்களுடைய வாழ்  க்கை, இனி ஒன்றுக்கும் உதவாது என்று சமுதாயத்தால்; தள்ளப்படலாம். பாவத்தின் பாரத்தினால், மங்கி எரிகி ன்ற விளக்கைப் போல, வாழ்க்கையிலே இனி ஒரு நம்பிக்கை இல்லை என்ற நிலைக்கு தள்ளப்படலாம், சிராய்க்கப்பட்ட நாணலைப் போல பெலனற்ற நிலைக்கு தள்ளப்படலாம். இனி ஒன்றுக்கும் உதவாதவன், உதவாதவள் என்று கைவிடப்படலாம். ஆனால் அன்பு நிறைந்த மீட்பர் இயேசு, உன்னை வா என்று அழைக்கின்றார்! பாவத்திலே வாழும் பாவிகளின் ஆத்துமாவின் அவல நிலையை கண்டு மனதுருகின்றார். அணைந்து போகின்ற விளக்கிற்கு புது எண்ணெய் ஊற்றி, திரியை சுத்தம் செய்து, பூமிக்கு வெளிச்சமாக மாற்றுகின்றார். இந்த பூமியிலே அற்பமானவர்களும், குப்பையும், தூசியும் என்று மனிதர்களால் தள்ளப்பட்டவர்களும், தங்கள் வாழ்வை இயேசுவிடம் ஒப்புக் கொடுக்கும் போது, அவர் அவர்களை படுகுழியிலிருந்து தூக்கி கன்மலையின் மேல் நிறுத்துகின்றார்.

ஜெபம்:

உன்னதமான தேவனே,  தகுதியில்லாதவன்(ள்) என்று என்னை நீர் தள்ளிவிடாமல்,  என்னையும் உம்முடைய ராஜ்யத்தின் பங்காளியாக, உம்முடைய மகனாக மகளாக தெரிந்து  கொண்டமைக்காக நன்றி! இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - சங்கீதம் 40:2