புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 12, 2018)

நற்பண்புகளை காண்பிப்போம்

கலாத்தியர் 5:13

சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்ப ட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.


ஒரு ஊரில் இருந்த சகோதரர்களில், இளையவன் தன் தமையனுக்கு கோபமூட்டும் செயல்களை செய்கைகளை, செய்து வந்தான். ஒரு நாள் தமையன் பொறுமையை இழந்து, தம்பியை கடுமையான வார்த்தைகளால் கண்டித்துவிட்டான். இளையவன் தன் தந்தையை நோக்கி, இவன் தன்னை பக்தனைப் போல காண்பித்துக் கொள்ளுவான், ஆனால் இவனின் கோபத் தையும் அதின் விளைவையும் பாருங்கள் என்றான். தமையன் தந்தையை நோக்கி, இவன் திட்டமிட்டு, நாளாந்தம் எனக்கு கோபமூட்டும் செயல் களை செய்து கொண்டே இருக்கின்றான். இவர்களில் யாரை நியாயப்படு த்துவீர்கள்? சில வேளைகளிலே தேவனுடைய பிள்ளைகள் மத்தியிலும் இவ் வண்ணமாய் நடைபெறுகின்றதல்லவா? பிரியமானவர்களே, நான் கோபம் கொள் ளும் போது, என் உடன் சகோதரன் என்னை கோபமூட்டினான் என்ற வார்த்தையையும், நான் என் உடன் சகோதரனை கோபப்படுத்தும் போது, அவனுக்கு பொறுமை இல்லை என்கிற வார்த்தையையும் சுட்டிக் காண்பிப்பது கர்த்தராகிய தேவனுக்கு ஏற்புடையதாகுமோ? இல்லை! மனிதர்கள் மத்தியில், என்னையே நான் நீதிமானாக காண்பிப்பதற்காக வேத வாக்கியங்கள் தரப்படவி ல்லை. நான் பரிசுத்தன், மற்றவன் பாவி என்று காண்பிப்பதற்காகவும் வேத வாக்கியங்கள் தரப்படவில்லை. நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம். அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்குங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவனாய் (ளாய்), உம்முடைய  அன்பை என் சபையிலுள்ள உடன் சகோதரருக்கு காண்பிக்க என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:16