புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 10, 2018)

தேவன் தரும் பெலம்

2 கொரிந்தியர் 10:5

அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும்,  தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்


ஊர் விவகாரங்களை பேசித்திரியும் மனிதன் ஒருவன், தன் அய லவனை கோபப்படுத்தும்படியான அற்பமான காரியங்களை செய்து கொண்டு வந்தான். பல காலமாக அமைதலாக இருந்த அயலவன், ஒரு நாள் அந்த மனிதனை பார்த்து, நீ ஏன் இப்படிச் செய்கின்றாய், உன் வீட்டில் உனக்கு வேலை இல்லையா என்று அதட்டினான். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்த அந்த வாயாடியாகிய மனிதன், பெரிதான கலகத்தைக் கிள ப்பி விட்டான். மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும் அவனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உத டுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி என்று நீதி மொழிகளின் புத்தகத்திலே வாசிக்கின்றோம். இப்படிப்பட்ட தனக்க டுத்த வேலைகளில் தலையிடுகின்றவர் கள், மற்றவர்களை காரணமின்றி கோப ப்படுத்துகின்றவர்கள் சபை ஐக்கியங் களில் கூட நுழைந்து கலகங்களை உண்டு பண்ணுகின்றார்கள். பிரியமான வர்களே, எங்கள் மாம்ச எண்ணங்களின்படி, நாங்கள் மற்றவர்களுக்கு அறிவு புகட்ட வேண்டும் என்பதே பிசாசானவனின் விருப்பம். கலக ங்களை கிளப்புகிறவர்களை எங்கள் எண்ணப்படி அடக்க முயலுதல், என்னுடைய பழைய வாழ்வைப்பற்றி அவதூறு பேசும் மனிதனின் குறை களை பேசித் திரிதல், அவனுடன் வாக்குவாதம் செய்தல் போன்ற வேத பிரமாணங்களுக்கு அப்பாற்பட்ட செயல்களை நாங்கள் நடப்பி க்கும் போது, பிசாசானவன் எங்கள் வாழ்வில் வெற்றி கொள்கின் றான். எங்கள் போராயுதங்கள் எங்கள் மாம்ச பெலன் அல்ல. தேவ னுடைய பெலத்தினாலே நாங்கள் பிசாசானவனின் தந்திரங்களை மேற்கொள்ள வேண்டும். இக்கட்டான சூழ்நிலைகளில், பொறுமையாக இருந்து, அதிகமாக ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, பிசாசானவனின் தந்திரங்களை ஜெயிக்கும்படியாய், ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தை எப்போதும் அணிந்தவனாய் (ளாய்) இருக்க என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தெச 1:4-5