புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 07, 2018)

நாங்கள் யார்?

யூதா 1:15

தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தை களெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண் டிக்கிறதற்கும், ஆயிரமா யிரமான தமது பரிசுத்த வான்களோடுங்கூட கர்த் தர் வருகிறார்


நாங்கள் தேவ பக்தியுள்ளவர்களா? அல்லது தேவனின் பாதுகா வலர்களா? இஸ்ரவேல் ஜனங்களை மீதியானியரின் கையிலிருந்து விடுவிக்கும்படியாக, தேவன்தாமே, கிதியோன் என்னும் மனிதனை அழைத்தார். அவனுடைய தகப்பனிடத்திலிருந்த, அருவருப்பான பாகா லின் விக்கிரகங்களின் தோப்பை அழித்துப் போடும்படியாக கர்த்தரா கிய தேவன் தாமே கிதியோனிடம் கூறினார். அவன் அந்தப் பிரகார மாகவே செய்தான். இதனால் அந்த ஊர் மனு~ர் கோபம் கொண்டு, அவனை கொல்லும்படி யோசனை பண்ணினார்கள். அப்பொழுது அவனு டைய தகப்பன் அந்த ஜனங்களை நோக்கி: நீங்களா பாகாலுக்காக வழக் காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப் பீர்கள்? அந்த விக்கிரகம் தெய்வமா னால், அது தானே தனக்காக வழக் காடட்டும் என்றான். இந்த உலகிலு ள்ள பலர் தங்கள் தேவர்களை பாது காக்கின்றார்கள். அவைகளுக்காக வழ க்காடுகின்றார்கள். நாங்களோ, சர்வ வல்லமையுள்ள மெய்யான தேவனை எங்கள்    தேவனாக கொண்டுள்ளோம். அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்! ஆனாலும், ஜனங்கள் மனந்திரும்பி பரலோகம் செல்லும்படியாய் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கின்றார். கர்த்தருக்காக கண்ணீர் விடும்படி யாயும், அவரை எதிர்ப்பவர்களை அழிப்பதற்காகவும் தேவன் எங் களை அழைக்கவில்லை. அதை தேவன்தாமே குறித்த காலத்திலே செய்வார். மனத்தாழ்மையுடனும், சாந்தத்துடனும் அவர் பணிக்காக அழைக்கப்பட்டோம். உண்மையான தேவ பக்தியுள்ளவர்கள், தேவனை மனதார நேசிப்பார்கள். தங்கள் நாளாந்த வாழ்க்கையிலே, தேவனுடைய சுபாவங்களை வெளிக்காட்டுவார்கள். 

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே,  நான் உம்மிடத்தில் பெற்றுக் கொண்ட பணியை, மனத்தாழ்மையுடனும்,  சாந்தத்துடனும், உம்முடைய சித்தப்படி செய்து முடிக்க எனக்கு துணை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோத்தேயு 2:2