புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 05, 2018)

மனப்பூர்வமான அர்ப்பணிப்பு

எபிரெயர் 13:21

நீங்கள் தம்முடைய சித் தத்தின்படிசெய்ய உங்க ளைச் சகலவித நற்கிரி யையிலும் சீர்பொருந்தி னவர்களாக்குவாராக


போகும் வழியிலே வாழ்விழந்தவனைப் போல இருக்கும் தெரு வாசியைப் பார்த்த ஒரு மனிதன், “இவன் ஏன் தன் வாழ்வை இப்படி அழித்துக் கொண்டிருக்கின்றான், இவனுக்கு உதவுவது தேவனுடைய சித்தமோ என்று முதலில் ஆராய வேண்டும் என்று தன் மனதில் கூறி, தன் வேலைக்கு சென்று விட்டான். மத்தியான வேளையிலே, அந்த மனிதனுடைய சிரே~;ட தொழில் அதிபர், அவனை  தன் காரியாலத்திற் குள் வரவழைத்து, இன்னுமொரு பட்ட ணத்திலுள்ள, தங்களுடைய அலுவலக த்தில், முகாமையாளர் ஒருவர் தேவை, நல்ல சம்பளம், கார் மற்றும் தங்குமிட வசதிகளும் உண்டு என்று கூறி முடி ப்பதற்குள், நான் அங்கு போகின் றேன் என்று கூறிவிட்டான். அந்த வேளையில் தேவனின் சித்தத்தை கேட்க வேண்டும் என்ற எண்ணம் சற்றும் அவன் மனதில் தோன்றவில்லை. பிரியமானவர்களே, கிறிஸ்தவ வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று எங்கள் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்து காட்டினார். அந்த வாழ்க்கையின் மையப்பொருள் “பிதாவின் சித்தம்” இது எங்கள் வாழ்வில் நிறைவேற்றப்பட வேண்டும். பிதாவின் சித்தம் நிறைவேற்றும் வாழ்க்கையில் தன்னலமற்ற சேவை இருக்க வேண் டும். எங்களுடைய யோசனைகள் நிறைவேறவேண்டும் என்றும் எண்ணி, வழக்குக்கும் வாதுக்குமான, சந்தர்ப்பங்களுக்கு தப்பிக் கொள் வதற்கும்,  சுயலாபத்திற்காகவும் தேவனுடைய சித்தத்தை தேடுப வர்கள் கிறிஸ்துவை உடையவர்கள் அல்ல. இந்த உலகத்தோடு அழி ந்து போகும் பொருட்களுக்காக, தங்கள் இனஞ்சனம், சொந்த பந்த ங்களை விட்டு தூர இடங்களுக்கு செல்ல மனிதர்கள் எப்போதும் ஆய த்தமாக இருக்கின்றார்கள். நாங்களோ, பிதாவின் சித்தத்தை நிறைவே ற்றும்படியாய் மனப்பூர்வமாய் எங்களை ஒப்புக் கொடுப்போம்.

ஜெபம்:

பரலோக தேவனே, என்னுடைய சுயலாபத்திற்காக உம்முடைய சித்தத்தை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் என்னைவிட்டு அகன்று,மனப்பூர்வமாக உம்முடைய சித்தத்தைச் செய்ய என்னை வழி நடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2