புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 02, 2018)

நம்புகிறது அவராலே வரும்

சங்கீதம் 62:5

என் ஆத்துமாவே, தேவ னையே நோக்கி அமர்ந் திரு,  நான் நம்புகிறது அவராலே வரும்.


“என்னுடைய நிலையை யார்தான் அறிவார்கள்”  என்று ஒரு தாயானவள் கூறி கசந்து கொண்டாள். இந்த உலகிலே அன்பு, பாசம் போன்ற பதங்களுக்கு பல வரைவிலக்கணங்கள் உண்டு. வாழ்க் கையை வென்று காட்டுகிறேன் என்ற நல்ல எண்ணத்துடன் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கின்றவர்கள், எதிர்த்து வரும் சிறிய சவால்களைக் கண்டு கலங்கிப் போகின்றார்கள். எதுவும் தங்களை பிரிக்க முடி யாது என்று சபதம் கூறியவர்கள், பிற் பாடு தள்ளாடிப் போய்விடுகின்றார் கள். எங்களைச் சூழ்ந்து எவ்வளவு அன்புள்ளவர்கள் இருந்தாலும், எந்த மனிதனாலும் இன்னுமொருவரின் நிலையை பூரணமாக அறிந்து கொள்ளமுடியாது. தங்கள் உண்மை நிலையை கூறினால் என்னை பிழையாக விளங்கிக்கொண்டு, நியாயந்தீர்த்து விடுவார்கள் என்ற பயம் மனிதர்கள் உள்ளத்தில் உண்டு. உள்ளத்தில் உள்ளதை சொல்ல விரும்பினாலும், அதன் தார்ப்பரியத்தை உண்மையாக வெளிக்காட்ட வார்த்தைகள் இல்லை. ஏறத்தாழ இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு நகோமி என்ற ஒரு ஸ்திரி தள்ளப்பட்டாள். கணவனோடும், இரண்டு குமாரர்க ளோடும் நன்மையை  தேடி, மோவாப் தேசத்திற்கு சென்றவள், தன் கணவனையும், இரண்டு குமாரர்களையும் இழந்து, கசப்புடன் தன் தேசத்திற்கு திரும்பினாள். அவளுடன் திரும்பி வந்த மருமகளாகிய ரூத் வழியாக கர்த்தர் நன்மையை உண்டு பண்ணினார். பிரியமானவர்களே, எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில் லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியராகிய இயேசு நமக்கிருக்கிறார். எங்கள் வாழ்க்கையின் நாட்களை மட்டுமல்ல, நாங்கள் தோன்றுமுன் இருந்த நாட்களையும், இனி வர இருக்கின்ற நாட்களையும் நன்கு அறிவார். அவரிடம் உங்கள் நிலையை தெரியப்படுத்துங்கள். நாங்கள் நம்புகிற நன்மை அவராலே வரும்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, என்னுடைய வாழ்வின் நிலையை அறிந்தவர் நீர் ஒருவரே, நான் உம்மை நம்பியிருக்கிறேன், என்னை அழுத்தும் சவால்களை மேற்கொள்ள பெலன் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:14-15