புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 30, 2018)

தீர்மானம் எங்களுடையது!

பிலிப்பியர் 3:13-14

பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,  கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.


ஒரு மனிதன் தனக்கு ஏற்பட்டிக்கின்ற நோய்க்கு பரிகாரம் தேடி, இயற்கையியல் முறையான மூலிகை மருத்துவங்களை நாடினான், ஆனாலும் அவை எதுவும் அவனுக்கு பலனளிக்கவில்லை. பட்டணத்திலே இருந்த ஒரு பிரபல்யமான சிறந்த வைத்தியவர் ஒருவரை,  அவனு டைய நண்பன் அவனுக்கு அறிமுகப்படுத்தினான். அந்த வைத்தியர் சகல சோதனைகளையும் செய்து, அந்த மனிதனுடன் அதிக நேரம் பேசினார். கிடைக்கப்பெற்ற தகவல்கள் யாவற் றின் அடிப்படையில், வைத்தியத்தை ஆரம்பிக்க முன், அந்த மனிதனிடம் இருந்த அடிப்படையான ஒரு தீய பழ க்கத்தை விட்டுவிட வேண்டும் என வைத்தியர் ஆலோசனை கூறினார். அதை விட்டுவிடாமல் எந்த வைத்திய முறையும் பலனளிக்கப் போவதில்லை என வைத்தியர் திட்டமாக கூறினார். ஆனால், அந்த மனிதன், அந்த பழக்க த்தை விட முடியாது,  அதற்கு மாற்று வழிகள் உண்டா என்று வைத்தியரிடம் கேட்டான். பிரியமானவர்களே, நாட்டின் தலை சிறந்த வைத்தியரிடம் சென்றாலும், தான் அடிப்படை யாக செய்ய வேண்டிய காரியங்களை அவனுக்கு செய்ய விருப்பமி ல்லை. பரலோகத்தை நோக்கி, யாத்திரை செய்து கொண்டிருக்கிற நாங்களும், எந்த தேசத்திலிருந்தாலும், எங்கு சென்றாலும்,  தேவனு டைய சத்தியங்கள் மாறிப் போவதில்லை. நாங்கள் எந்த நிலையிலி ருந்தாலும், “பிதாவின் சித்தத்தை” எங்கள் சொந்த வாழ்க்கையில் நிறைவேற்றுபவர்களாயிருக்க வேண்டும். அதற்கு தடையான, எதிரி டையான மாம்ச கிரியைகளை நாம் விட்டுவிட உதவும்படி ஆவியா னவர் இருக்கின்றார். தேவ ஆலோசனைகளை கொடுப்பவர்கள் இருக்கின்றார்கள். ஆனால்; எங்களுக்காக வேறு யாரும் தீர்மானம் எடுக்கமுடியாது

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, உள்ளான மனிதனிலே நோய் கொண்டு ஒடுங்கிப் போகாமல், பின்னான மோசம் போக்கும் மாம்ச கிரியைகளை விட்டு, முன்னேறும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:31-32