புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 21, 2018)

அறிவுள்ள உதடுகள்

நீதிமொழிகள் 20:15

பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.


இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.  நல்ல மனு~ன் இருதய மாகிய நல்ல பொக்கி~த்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டு கிறான், பொல்லாத மனு~ன் பொல்லாத பொக்கி~த்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். மனு~ர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப் புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார் த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க் கப்படுவாய்; அல்லது உன் வார்த்தை களினாலே குற்றவாளி என்று தீர்க்க ப்படுவாய் என்று இயேசு கூறினார். ஒரு மனிதனிடம் பொன், வெள்ளி, மற்றும் விலையுயர்ந்த இந்தப் பூமியின் பொக்கி~ங்கள்  இருக்கலாம் அல்லது எதுவும் அற்ற ஏழையாக இருக்கலாம். இந்த இரண்டு நிலைகளும் அவனுடைய வாயின் வார்த்தைகளை நிர்ணயிப்பதில்லை. அநேக மாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், தேவன் தந்த வேதமே மனிதனுக்கு நலம். அந்த வேதத்திலுள்ள வார்த்தைகளாகிய அழியாத பொக்கி~த்தினால் தன் இருதயத்தை நிறைத்துக் கொள்கின்றவன் அறிவுள்ள உதடுகளை பெற்றுக் கொள்கின்றான். அவன் வாயிலிரு ந்து கெட்ட வார்த்தை ஒன்றும் புறப்படாது.  கேட்கிறவனுக் கும், தன க்கும்  பிரயோஜனமுண்டாக்கும் பக்திவிருத்திக்கு ஏதுவான தேவனு டைய திவ்விய வார்த்தைகளே உண்டாகும். இந்த பொக்கி~ம் இல் லாதவனின் இருதயம் தேவனுக்கு தூரமாக இருப்பதால், அவன்; தன் வாயினால் தேவனை துதித்தாலும், வேத வார்த்தைகளைப் பேசினா லும், அவன் இருதயம் உலக காரியங்களினால் நிறைந் திருப்பதி னால், அவன் இருதயமோ தேவனுக்கு தூரமாய் விலகி யிருக்கிறது. எனவே அறிவுள்ள உதடுகளை வாஞ்சித்து, உங்கள் இருதயத்தை பரலோக பொக்கி~த்தினால் நிறைத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய வார்த்தைகளை தியானித்து, பரலோக பொக்கிஷங்களினால் என் இருதயத்தை நிறைத்து, பக்திவிரு த்திக்கேதுவான வார்த்தைகளை பேச எனக்கு கிருபை செய்யும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 15:8-9

Category Tags: