புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 17, 2018)

வழிகளை வாய்க்கச்செய்யுங்கள்

யோசுவா 1:7

என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியா யப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவன மாயிருக்கமாத்திரம் மிக வும் பலங்கொண்டு திட மனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமா னாய் நடந்துகொள்ளும் படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் வில காதிருப்பாயாக.


தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தபின், இஸ்ரவேல் ஜனங் களை வாக்களிக்கப்பட்ட கானானுக்குள் வழிநடத்திச் சென்று, யுத்தங் களை நடப்பித்து, அந்த தேசத்தை 12 கோத்திரங்களுக்கும் பிரித்துக் கொடுக்கும்படியான பொறுப்பை, கர்த்தர்தாமே, யோசுவா என்னும் மனிதனிடம் கொடுத்தார். கர்த்தர் அவனை திடப்படுத்தும்படி அவ னோடு பேசும் போது, இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தைத் ‘தியானி த்துக் கொண்டிருப்பாயாக’ அப்பொ ழுது நீ உன் வழியை வாய்க்கப்ப ண்ணுவாய், அப்பொழுது புத்திமானா கவும் நடந்து கொள்ளுவாய் என்று கூறினார். அதாவது, எப்பொழுதும் தேவனுடைய வசனத்தை குறிந்த சிந்தை எங்களில் இருக்க வேண்டும். காலை யிலேயோ நாங்கள் வேதத்தை வாசி த்து, தியானித்து, ஜெபித்துவிட்டு, கடைமை முடிந்தது என்று அப்படியே அதை மறந்து விடாமல், அதை அந்த நாள் முழுவதும் தியானித்து, அந்த வார்த்தைகளுக்கெதிராக சவால்கள் வரும் போது, கற்றவைகளை நடைமு றைப்படுத்த வேண்டும். எடுத்துக்காட் டாக, ‘நீடியபொறுமையுள்ளவர்களாக இருங்கள்’ என்ற ஒரு வசனத்தை தியானம் செய்தால், அந்த நாளில் எங்களுக்கு சிலர் கோபமூட் டலாம், அந்த வேளைகளிலே,  நாங்கள் தியானித்தவைகள் எங்களை ஆளுகை செய்யும்படியாக அந்த வசனம் எங்கள் இருதயத்திலும், எங்கள் சிந்தையிலும் இருக்க வேண்டும். இப்படியாக கற்றவைகளை நாங்கள் பயிற்ச்சி செய்யும் போது, புத்தியுள்ளவர்களாய் நடந்து தேவ சித்தத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்றுகின்றவர்களாய் இருப்போம்.

ஜெபம்:

என்னை நேசிக்கின்ற தேவனே, உம்முடைய வசனத்தை எப்போதும் என் இதயத்திலே பதித்து வைத்து, சவால்கள் வரும்போது, அந்த வசனங்களின்படி நடக்க என்னை வழி நடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6