புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 06, 2018)

பரந்த மனப்பான்மை

நீதிமொழிகள் 20:6

மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?


இன்று பல மனிதர்கள், நாங்கள் பரந்த மனப்பான்மையுடையவர்கள், தாராளமாய் கொடுப்பவர்கள், யாவரையும் ஏற்றும் கொள்ளும் கொள்கையுடைய, முற்போக்குவாதிகள்  (Liberal Thinking) என தங்களை பிர சித்தப்படுத்துகின்றார்கள். இவர்களில் அநேகர் தங்கள் செயற்பாடு களை யாவரும் அறியும்படி வெளியரங்கமாக்குகின்றார்கள். இவர்கள் தானதர்மங்களை  செய்யும்   போது தாரை (Trumpet) ஊதி, பிரசித்தப் படுத்துகி ன்றார்கள். தங்கள் கிடாரங்களிலுள்ள சோற்றை மற்றவர்களுக்கு கொடுக்கா மல், மற்றவர்களுடைய சிறிய பானை யிலுள்ள சோற்றை பகிர்ந்து கொடுக் கும்படி உற்சாகப்படுத்துவார்கள். தங் கள் களஞ்சியங்களையோ பல தலை முறைகளுக்கு நிறைத்துவைப்பார்கள். எங்கள் இயேசுவைப் போல தயாள குணமுடையவர்கள் எவருமில்லை. ஆனால் அவர் சுயலாபம் கருதி செயற்படுகின்றவர் அல்லவே. தன்னுடைய உயிரையே பாவிகள் மீட்படையும்படி கொடுத்தவர் எங்கள் இயேசு ஒருவரே. பாவியான மனிதர்கள் இயேசுவிடம் வந்தார்கள், அவரை சந்தித்தபின் அவர்கள் இனிமேல் பாவியல்ல. அவர்கள் பாவங்களை மன்னித்து, இனி பாவம் செய்யாதே என்று கூறி, சமாதானத்தோடே அவர்களை அனுப்பினார்.  இந்த உலகத்திலே, பரந்தமனப்பான்மையுள்ளவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள்,  மனிதர்கள் பாவத்தை குறித்து உணர்வடையும் வழியை காண்பிக்காமல்,  அவர்கள் தங்கள் பாவங்க ளிலே அப்படியே வாழ்ந்து அழிந்து போகும்படியே, வழியமைத்துக் கொடுக்கின்றார்கள். ஆனால் யாவரையும் ஏற்றுக் கொள்ளும் இயேசு, பாவிகள் இனி பாவம் செய்யாமல், பரிசுத்தமாய் வாழ்ந்து, பரலோ கிலே, தன்னுடன் நித்தியம் நித்தியமாய் வாழும்படி பரந்த மனப்பா ன்மையுடன் யாவரையும் அழைக்கின்றார்.

ஜெபம்:

பரலோக தந்தையே, உம்முடைய பரந்த மனப்பான்மை மனிதர்கள் யாவரும் பரலோகம் செல்ல வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட நோக்கை உடையவனாக(ளாக) வாழ எனக்கு கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 8:1-11