புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 03, 2018)

கிறிஸ்துவின் மாதிரியின்படி

ரோமர் 15:6

கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ் செய்வாராக.


இந்த உலகில் காணும் பல வியாபார, சமுக வேலை ஸ்தாபனங் களின் நிர்வாகிகளில் சிலர் (டிழயசன அநஅடிநசள) எப்போதும் எதிர்வாதம் பேசுகின்றவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட நிர்வாகிகளை வேலைக்கு அமர்த்துவதில் சில உரிமையாளர்கள் பிரியமாயிருப்பா ர்கள். இப்படிப்பட்ட நிர்வாகிகளும் தங்கள் கிரியைகளில் பெருமிதமடைவதுண்டு. இன்று எங்கள் ஐக்கியங் களிலும் பல மட்டங்களிலே நிர்வாகி கள் செயற்படுகின்றார்கள். பிரதான மாக நிர்வாகக் குழுவின் கீழ், பெண் கள் ஊழியம், ஆண்கள் ஊழிய ஐக்கியம், வாலிப ஊழியம், ஓய்வுநாள் பாடசாலை ஊழியம் என்று பல ஊழி யங்களை நிர்வாகிக்கின்றவர்கள் பலர். எங்கள் ஒவ்வொருவரின் சொந்த குடு ம்பங்களிலும்,  குடும்ப அங்கத்தினர் ஒவ் வொருவரும், குடும்பத்தை நிர்வாகிக்கும்  நிர்வாகிகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளோம். கர்த்தர்தாமே இவை யாவும் நல்ல ஆளுமைக்காகவே ஏற்படுத்தியுள்ளார். நாங்கள் எதிர் நீச்சல் போடும்படியாய் அழைக்கப்படவில்லை. நாங்கள் எப்படிப்பட்ட நிர்வாகிகளாகவும் இருக்கலாம், ஆனால் நாங்கள் யாவரும் முதன் மையாக ‘கிறிஸ்துவை வெளிப்படுத்தும் நல்ல ஸ்தானாதிபதிக ளாக’ இருக்கும்படியாகவே அழைக்கப்பட்டோம். எங்கள் சிந்தனை, சொல், செயல், பேச்சுக்கள் யாவும் பிதாவாகிய தேவனின் சித்தத்தை நிலைநாட்டுகின்றதாக இருக்க வேண்டும். வழக்கிற்கும் வாதுக்கும், விவாதங்களுக்கும் உடந்தையாக இல்லாமல், அழைத்த தேவனின் சித்தத்தை நிறைவேற்றும்படி, அமைதலுள்ள ஆவியை உடையவர்களாய் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை நிர்வாகிக்க வேண் டும்.  தர்க்கங்களை தவிர்த்து, எங்கள் செயற்பாடுகள் யாவும், வேத வசனங்களின் அடிப்படையில் நடப்பித்து, ஒருமனதோடு ஜெபத்திலே தரித்திருந்து நல்ல தீர்மானங்களை எடுக்க வேண்டும். 

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, எங்களுடைய கிரியைகள், எங்களையும், எங்களை சுற்றியிருக்கின்றவர்களையும் திருப்த்திப்படுத்துவதாயிராமல், உம் சித்தத்தை நிறைவேற்றுவதாய் இருக்கும்படி கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:2