புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 02, 2018)

தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை

மத்தேயு 10:28

ஆத்துமாவையும் சரீரத் தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.


“நாங்கள் எங்கள் ஸ்தாபனத்திற்கெதிரான அந்தக் குற்றத்தை ஏற்றுக் கொண்டால், எங்களுடைய ஸ்தாபனத்திற்கு அவப்பெயரும், வியாபா ரத்திற்கு பெரும் பாதகமும் ஏற்படும். எனவே அந்த சம்பவத்தை எப்ப டியாவது சமாளித்து விட வேண்டும்” என அந்த ஸ்தாபனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறினார். இப்படிப்பட்ட செயற்பாடுகளை இந்த உலக போக்கிலே சிந்திப்போர், ஒரு வேளை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் இது தேவனுடைய பார்வையில் எற்பு டையதல்ல. குற்றங்களை ஏற்றுக் கொள்வதால் சில வேளைகளிலே அதைத் தொடர்ந்து சில பின்விளைவுகள் உண் டாகலாம். சில வேளைகளிலே, நாங் கள் எங்கள் பெயர்களை அல்லது சில ஸ்தாபனங்களின் பெயர்களை தேவனுக்கு மேலாக உயர்த்தி விடுகின்றோம். அது எப்படியென்றால், நான் செய்த இந்தக் குற்றத்தை ஏற்றுக் கொண்டால், என்னை பின் பற்றி வரும் மனிதர்கள் என்ன நினைப்பார்கள்? என்னுடைய சபை ஐக்கியத்தின் பெயருக்கு பங்கம் ஏற்படும்? இனி மனிதர்கள் இங்கே வரமாட்டார்கள் என்று சில மனிதர்கள் தங்கள் அறிவுக்கெட்டிய பிரகாரம் சிந்திக்கின்றார்கள். எங்களுடைய கேள்வியானது: என் குற்ற த்தை ஏற்றுக்கொள்ளாமல், எப்படி அவருடைய சந்நிதியிலே ஜெபம் செய்யப் போவேன்? என் நிமித்தம் உலக மனிதர்கள் இயேசுவின் நாமத்தை தூஷிப்பார்களே, நான் என் இயேசுவை சந்திக்கும்போது என்ன சொல்லுவேன்? என்ற பிரகாரம் இருக்க வேண்டும். பிரியமா னவர்களே, பூவுலகிலே எங்கள் பெயர்கள் மேன்மையடைவதும், நாங்கள் செல்லும் ஆலயத்தின் பெயர் பிரபல்யமாயிருப்பதால் வரும் மேன்மையும் அற்பமே. எங்கள் ஆத்துமா இயேசுவின் பார்வையிலே தூய்மையானதாக இருப்பதே மேன்மையானது. எனவே எங்கள் கிரியைகள், இயேசுவை பிரியப்படுத்துகின்றதாய் இருக்க வேண்டும்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, மனிதர் முன்னிலையில் நான் என்னை நீதிமானாக காண்பிப்பதைப் பற்றி முயற்ச்சிக்காமல், உம்முடைய சந்நிதியிலே நான் ஏற்ப்புடையவனாக இருக்கும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:14