புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 27, 2018)

செம்மையானவர்களின் வம்சம்

சங்கீதம் 112:2

அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மை யானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.


இயற்கை அனர்த்தங்கள், பல உள்ளநாட்டு யுத்தங்கள், பாரிய அள விலான இடம்பெயர்வுகளை இப்போது வாழும் சந்ததியாகிய நாங் கள், செய்திகள் வழியாக கேட்கின்றோம். பலர் இவைகளை சந்தித்தி ருக்கின்றோம். தங்கள் பிள்ளைகளைக் குறித்த நல்ல எதிர் காலத்தின் நம்பிக்கையோடு வாழ்ந்தவர்களின் நம்பிக்கை ஒரு நொடிப்பொழு தில் கானல் நீர் போல மாறிப் போய் விடுகின்றது. தங்கள் சொந்த தேசத் திலே நன்றாக கல்வி பயின்று, நல்ல தொழிலிலே அமர்ந்தவர்கள், புலம்பெ யர்ந்து அடிப்படை ஊதியத்திற்காக வேலை பார்க்கின்றார்கள். சொந்த மாளி கைகளில் வசித்தவர்கள், வாடகைக்கு சாதாரண வதிவிடங்களிலே வசிக்க வேண்டியதாகிவிடுகின்றது. பெரிய எதிர்பார்ப்போடு, அபிவிருத்தியடை ந்த நாடுகளுக்கு சென்ற பலர், அகதி முகாம்களிலே தஞ்சம் அடைய வேண்டியதான நிலை ஏற்பட்டிருக்கின்றது. இப்படியாக மனிதனுடைய வாழ்க்கையின் தன்நம்பிக்கை பலனளிக்காமல் போய்விடுகின்றது. இந்த பூமியிலே நாங்கள் காண்கின்றவைகளும், எங்கள் வாழ்க்கையும் தற்காலிகமானவைகள். தங்கள் சிறுபிராயத்திலே பல க~;டங்கள் மத் தியிலே வழி தெரியாமல் இருந்தவர்கள், தேவனுடைய முகத்தை நோக்கி பார்த்து செழிப்படைந்தார்கள். ஆனால் அவர்கள், தங்கள் பிள்ளைகளைக் குறித்த விடயங்களில், தேவனை மறந்து, தங்கள் செல்வங்களையும், செல்வாக்குகளையும், இந்த உலக மேன்மைக ளையும் நோக்கிப் பார்க்கின்றார்கள். உங்கள் நித்தியமான வாழ்க் கையை குறித்தோ, அல்லது இந்த பூமியிலே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலங்களைக் குறித்த நிரந்தரமான உத்தரவாதம் இயேசுவிலே மாத்திரம் உண்டு. எனவே கர்த்தரை நம்பி நன்மை செய்யுங்கள். உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.

ஜெபம்:

இரக்கமுள்ள ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமு றையாக எங்களுக்கு அடைக்கலமானவர். இந்த உண்மையை ஒரு போதும் மறவாமல் வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 20:7