தியானம் (சித்திரை 06, 2018)
வலது, இடது புறம் சாயாமல்
நீதிமொழிகள் 4:27
வலதுபுறமாவது இடது புறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக் குவாயாக..
தன் பெற்றோருக்கு கீழ்படிவுள்ளவனாக வாழ்ந்து வந்த மகன், மேற்ப டிப்புக்காக இன்னுமொரு ஊருக்கு செல்ல வேண்டியதாயிருந்தது. அந்த கல்லூரி வளாக விடுதியில் தங்கிருந்த சக மாணவர்கள் அவ்வப்போது, இரவு நேர கேளிக்கை விடுதிக்கு (Night Club)செல்லும் போது, இவனையும் தங்களுடன் வரும்படி அழைப்பதுண்டு. அவனோ, தன்னை உருவாக்க தாய் தந்தையர் படும் பிரயாசத்தை உணர்ந் தவனாக, நான் வந்த நோக்கம் கல்வி கற்பது, அதை கருத்துடன் முடிக்க வேண்டும் என்று இருந்தான். ஆனா லும் சில மாதங்களுக்கு, பின் சக மாணவர்கள் அவனை வருந்திக் கேட்ட தால், ஒரு முறை அவர்களுடன் போகு ம்படி அரை மனதுடன் சம்மதித்திருந்தான். அன்று, அந்த விடுதியிலே சிலருக்கிடையில் நடந்த கைகலப்பினால், யாவரும் பொலிஸ்நிலையத் திற்கு செல்லவேண்டியதாயிற்று. இவன் எதிலும் சம்மந்தப்படாவிட்டா லும், அன்று அங்கு இருந்ததால், விடுதியினால் தொடுக்கப்பட்ட வழக்கு முடியும் வரை இவனும் நீதிமன்றத்திற்கு சென்று வரவேண்டி யதாயிற்று. இவன் தன் படிப்பை வெற்றிகரமாக முடித்தான், ஆனாலும் இவனுடைய பிழையான தீர்மானத்தினால் ஏற்பட்ட அந்த வழக்கினால், கசப்புடன் பல மாதங்களை கழிக்க வேண்டியதாயி ருந்தது. பிரியமானவர்களே, இந்த பூமியிலே உங்களின் வாழ்க்கை யின் நோக்கதை கிறிஸ்துவுக்குள் உறுதி செய்து கொண்டு, அதை நோக்கி ஓட வேண்டும். மற்றவன் அங்கு செல்கின்றான், அயலவன் இங்கு செல்கின்றான் என்று இருக்கும் பாரத்துடன் இன்னும் சுமை களை வாழ்க்கையில் ஏற்றிக் கொள்ளாமல், தெளிந்த புத்தியுள்ளவர் களாய். உங்கள் நடையைச் சீர்தூக்கிப்பாருங்கள். வலது புறமோ, இடது புறமோ சாயாமல், இயேசு கிறிஸ்து காட்டிய வழியில் முன்னேறிச் செல்வோம்.
ஜெபம்:
பரலோக தேவனே,
எங்கள் நோக்கத்தை பிழையான திசைக்கு திருப்பக் கூடிய அநேக காரியங்கள் எங்களை சூழ்ந்து கொள்ளும் போது,
அவற்றுள் விழுந்து விடாமல் முன்னேற கிருபை செய்யும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலி 3:15-21