புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 03, 2023)

தேவ நீதியை நிறைவேற்றுங்கள்

1 கொரிந்தியர் 6:7

நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?


ஒரு தகப்பனானவன், தான் வேலை செய்யும் இடத்திலே, தன்னுடைய இயக்குனர், தனக்கெதிராக பேசும் அநியாயமான வார்த்தைகளை கேட்டு மனவருத்தமடைந்தான். அந்த கடும் வார்த்தைகள் அநீதியானதாக இருந்தபோதும், மகளுடைய திருமண நாள் நெருங்கிங் கொண்டிருக்கின்றது. இளைய மகனானவன் உயர்தரத்திலே கல்வி கற்கின்றான். எனவே, நான் அவமானப்பட வேண்டி நேர்ந்தாலும், என் குடும்பத்தின் நல னுக்காக இன்னும் கொஞ்ச காலம் பொறுமையாக இருப்பேன். தேவனா னவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றார் என்று தன் மனதை தேற்றிக் கொண்டான். தன் குடும்பத்தின் இல க்கு, இலட்சியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக, அநீதியான இடத்தில், நீதியாக தன் வேலைகளை சகிப்புத்தன்மையோடு அந்த தகப்பனானவர் செய்து வந்தார். நம்முடைய வாழ்வின் மேலான இலக்கு என்ன? நாம் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கின் றோம். அந்த உன்னதமான இலக்கை நோக்கி செல்லும் பாதையிலே உபத்திரவங்கள் உண்டு. உபத்திரவங்களை எதிர்நோக்கும் போது, மன த்தெளிவுள்ளவனாயிருந்து, ஆண்டவர் இயேசுவைப் போல, பெற்ற பொறு ப்பை, பிதாவின் சித்தப்படி நிறைவேற்றி முடிக்கும்வரை, தேவனுக்கு சித்தமானால், நாம் நன்மை செய்து தீங்கநுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மேலே கூறப்பட்ட, அந்த அன்புள்ள தகப்பனானவர் இன்னும் கொஞ்சக் காலம் அநீதியை சகித்துக் கொள்ள தீர்மானம் செய்தார். அதுபோல, மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை அடையும்படி க்கு, தற்போது நாம் எதிர்நோக்கும் அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவத்தை கிறிஸ்துவுக்காக சகித்துக் கொள்ள வேண்டும். அதி உன்னதமாக கன மகிமை உண்டு என்று விசுவாசிக்கின்ற நமக்கு, ஏன் வீட்டிலும், சபையிலும், சமுகத்திலும் உண்டாகும் உபத்திரவங்களை சகி த்துக் கொள்ள முடியாமலிருக்கின்றது? நாம் முற்றிலும் தேறிவிட் டோமா? நாம் மற்றவர்களுக்கு எந்த உபத்திரவமும் செய்யாத குற்றம ற்ற மனிதர்களா? அவிசுவாசிகளாகிய உறவினர் நண்பர்கள் முன்னிலை யிலே சகவிசுவாசிகளை குறித்து வழக்காடுவது நியாயமாக தோன்றுகி ன்றதா? அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை யென்று அறியீர்களா? எனவே வஞ்சிக்கப்படாதிருங்கள்;. நாம் அநியாய த்தின் மத்தியிலும் தேவநீதியை நிறைவேற்றுகின்றவர்களாகவே வாழக்கடவோம்.

ஜெபம்:

என் குறைவுகளை நிறைவாக்கும் தேவனே, நான் தீமைக்கு தீமை சரிக்கட்டுவேன் என்று வாழாமல், கிறிஸ்து இயேசுவின் சிந்தையைத் தரித்து தேவ சித்தத்திற்கு இடங் கொடுக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 4:5

Category Tags: