புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 04, 2022)

எதிரிகள் சூழ்ந்து கொள்ளும் போது...

ரோமர் 8:31

தேவன் நம்முடைய பட்சத் திலிருந்தால் நமக்கு விரோ தமாயிருப்பவன் யார்?


முற்காலத்திலே,சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று அநே கந்தரம் தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான். ஆகிலும் தேவனுடைய மனுஷனாகிய எலிசா, தேவ ஆவியின் வழிநடத்துதலினாலே, எதிரிகளின் சூழ்ச்சிகளை அறிந்து, அதை இஸ்ரவேலின் ராஜாவி னிட த்தில் கூறி வந்தான். இதனால் சீரிய ராஜாவின் திட்டங்கள் யாவும் கைகூ டவில்லை. இந்தக் காரியத் தினிமி த்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, தேவ மனுஷனாகிய எலி சாவை பிடிக்கும்படிக்கு, குதி ரைக ளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான். அவர்கள் இராக்காலத்திலே வந்து எலிசா இருக்கின்ற பட்டணத்தை வளைத்துக் கொண்டார்கள். ஆனால், எலி சாவும் அவனுடைய வேலைக்காரனும், படுத்து உறங்கி, காலையிலே எழுந்திருந்தார்கள். அப்பொழுது, எலிசாவின் வேலைக்காரன் கேயாசி இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற் றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் எலிசாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம் என்றான். அதற்கு தேவ மனுஷனாகிய: பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். வேலைக்காரன் அதை அறியமுடியாமல், அவன் கண்கள் மறைக்கப்பட் டிருந்ததால், தேவ மனுஷனாகிய எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரனின் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். தேவனாகிய கர்த்தர்தாமே இதைச் செய்தார் என்று நம்புவது பூரண விசுவாசமல்ல. அன்று எலிசாவிற்கும், அவனுடைய வேலைக்காரனுக்கும் அப்படிச் செய்த தேவன், இன்றும் என்னுடைய நெருக்கடியான சூழ்நிலையிலும் அப்படியே செய்வார் என்று விசுவா அறிக்கை செய்து, தேவனுடைய வழிடத்துதலுக்காக காத்திருக்க வேண்டும். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந் தவர் களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். இந்த உலக த்திலிருப்பவனைப் பார்க்கிலும் நம்மோடு இருப்பவர் பெரியவர். கர்த்த ருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்;, நீங்கள் அவ ரோடு இருந்தால், அவர் என்றென்றைக்கும் உங்களோடு இருப்பார்.

ஜெபம்:

என்றென்றும் மாறாத தேவனேஇ உம்முடைய வாக்குத்தத்தங்கள்இ உம்மை பயபக்தியோடு சேவிக்கின்றவர்களுக்கு நித்தியமானவைகள் என்று உணர்ந்து கொள்ளும்படி என் மனக்கண்களை திறந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:4-10