புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 02, 2022)

மறவாத தெய்வம்

ஏசாயா 49:15

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை


கிணற்றிலே தண்ணீர் மொள்ளும்படிக்கு சென்ற தாயானவள், தன் குழந் தையின் அழுகையின் சத்தத்தை கேட்டவுடனே, தான் செய்வதைவிட்டு விட்டு, ஒடிச் சென்று குழந்தையை தூக்கி அரவணைத்துக் கொண்டாள். குழந்தையானது தன் தாயின் அரவ ணைப்பிலே அமைதலாயிற்று. வித வையான அந்தத் தாயானவள், எளி மையான வீட்டிலே வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இருக்கும் பெலனும், சமு கத்திலே ஆதரவும் குறைவுள்ளதாகவே இருந்தது. எனினும் தன்னிடத்தில் இரு ப்பதெல்லாவற்றையும் நிறைவாகவும், உச்சிதமானதையும் தன் குழந்தைக்கு வழங்கினாள். குழந்தையின் ரூபமும், பருமனும், நிறமும் அவளுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. இது என்னுடைய குழந்தை, என்னுடைய பிள்ளை என்று அதை தன் முழு இருதயத்தோடும் நேசித்து ஆதாரித்து வந்தாள். இப்படிப்பட்ட இயற்கை சுபாவமுள்ள தாயானவள், ஒரு வேளை தான் பால் கொடுக்கும் பாலகனை மறந்து போனாலும், நான் உன்னை மறப்பதில்லை என்று தேவனாகிய கர்த்தர் வாக்குரைத்திருக்கின்றார். இது அவருடைய திவ்விய சுபாவமாக இருக்கின்றது. பாருங்கள், இந்த உலகத்திலே குறைவுள்ளவர்களாக இருக்கும் மனிதர்கள் தங்களிடமிரு க்கும் நிறைவானதை முற்றாக தங்கள் பிள்ளைகளுக்கு மனதார வழ ங்குகின்றார்கள். தங்கள் வாழ்க்கையைக்கூட தியாகம் செய்ய ஆய த்தமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். அப்படினால்யால், தேவனுடைய திவ்விய அன்பானது எவ்வளவு அதிகமாக இருக்கும் என் சிந்தித்துப் பாருங்கள். அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காரு ணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன் என்று தேவனாகிய கர் த்தர் தம்முடைய ஜனங்களுக்கு உரைத்;திருக்கின்றார். தம்முடைய சொந் தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் மீட்பர் இயேசுவை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவ ற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? அவரை நம்பியிருப்பவர்க ளுக்கு ஒரு நன்மையும் குறைவுபடுவதில்லை. அவர் நம்மிடமிருக்கும் உலக ஆஸ்திகள், கல்வியறிவு, அந்தஸ்து போன்றவற்றாலும் நம்முடைய இடம், நிறம், தோற்றம் எப்படியாக இருக்கின்றது என்பதை வைத்தும் நம்மை தள்ளிப்போடுகின்றவர் அல்லர். தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும்; தயை செய்கின்ற உண்மையுள்ள தேவனவர்.

ஜெபம்:

உன்னதத்திலுள்ள சகல ஆசீர்வாதங்களாலும் என்னை ஆசீர்வ திக்கும் தேவனே, ஆகாதவன்(ள்) என்று என்னை தள்ளிவிடாமலும், நித்திய வாழ்விற்கென்று அழைத்த உம்முடைய அன்பிற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - உபாகமம் 7:9-11