புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 05, 2022)

நாளையை குறித்த கவலை

மத்தேயு 6:34

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்;


ஒரு மனிதனானவன், நாட்டின் நடப்புக்களையும் அதன் பொருளாதார நிலைமைகளையும், உலகச் செய்திகளையும் இணையத் தளத்தில் வாசி ப்பதிலும், கேட்பதிலும் அதிக கவனமெடுத்து வந்தான். உலக நாடுக ளின் நிலைமைகள் நன்றாக இல்லை, வேலைவாய்ப்பு வீதம் குறைந்து கொ ண்டே போகின்றது, நாட்டின் பொரு ளாதாரமும், பொருளாதார பங்குச் சந்தைகயில் வீழ்ச்சி ஏற்ப டப் போகின்றது என்பதை அறிந்த போது, அவன் மனம் பதற்றமடைய ஆரம்பித்தது. என் வேலை என்ன ஆகும்? என் குடும்பத்தை யார் போஷpப்பார்கள்? முதலீடு செய்துள்ள என் சேமிப்பு நஷ;டம் அடைந்தால், நாளை என் நிலைமை என்ன ஆகும்? என்ற பல கேள்விகளால் அவன் இருதயம் கல ங்கிற்று. அவன் மனதில் பெரிய குழப்பம் ஏற்பட்டதால், பாதி இராத்தி ரியிலே அவன் தூக்கம் களைந்து போயிற்று. செய்திகளை கேட்பது தவறானதா? நாட்டின் பொருளாதாரத்தை பற்றி அறிந்து கொள்வது குற்றமா? ஊலக த்தின் போக்குகளை அறிந்து கொள்வது அவசியமற்றதா? அறிய வேண் டியவைகளை அறிந்து கொள்ளுங்கள் ஆனால் இந்த உலகத்தின் அறி வுக்கும் போக்குக ளுக்கும் உங்கள் வாழ்க்கையிலே ஒரு எல்லையை வைத்திருங்கள். அவைகளைத் தியானிக்காமல், வேதத்தை தியானியு ங்கள். ஏனெனில், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவ னுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லு கிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷpத்தவைகள் அல்லவா? அற்ப விசுவாசிகளே! இன்றை க்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத் தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிரு ங்கள்.இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவை களெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திரு க்கிறார் என்று ஆண்டவராகிய இயேசு எதற்காக கூறினார்? யாருக்கு கூறினார்? எனவே துர்செய்திகளை கேள்விப்படும் போதும், ஆபத்துக்கள் உங்களை நோக்கி வரும்; போதும் ஆறுதல் தரும் தேவ வார்த்தைகளை தியானியுங்கள். சகலமும் அறிந்த சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மோடு இருக்கின்றார்.

ஜெபம்:

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; என்று கூறிய தேவனே, சூழ்நிலையகளை கண்டு மனந் தளர்ந்து போகமல், உம் வார்த்தையில் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:7-11