புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 10, 2021)

தீமையை எதினால் வெல்வது?

1 பேதுரு 2:15

நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.


வாடகை வீட்டிலே வாழ்ந்து வந்த ஒரு மனிதனானவன், வீட்டுச் சொந்தக் காரரோடு ஏற்படுத்திய ஒப்பந்தத்திலுள்ள நியதிகளையும் நிபந்தனை களையும் முறைப்படி பின்பற்றி வந்தான். சில வேளைகளிலே, வீட்டுச் சொந்தக்காரர் அவனோடு கடுமையாக நடந்து கொண்டாலும், அதையும் சகித்துக் கொண்டு தன் நன் நடக்கையையும் நற்பண்புகளையும் விட்டு விடாதிருந்தான். ஆண்டுகள் சில கடந்து சென்றதும் அந்த கடுமையான வீட்டு சொந்தக்காரரும் அவனைக் குறி த்து நற்சாட்சியை பகர்ந்து கொண் டார். பிரியமான சகோதர சகோதரி களே, நாம் இந்த உலகத்திலே வாழும் வாழ்க்கையும் வாடகைவீட் டிற்கு ஒத்ததாயிருக்கின்றது. இந்தப் பூமியிலே நாம் வாழும்வரைக்கும், நாம் வாழும் நாட்டின் சட்டதிட்டங்க ளுக்கு கர்த்தருக்குள் உட்பட்டிருக் கின்றோம். அதவாது, இன்று சில நாடுகளிலே, கர்த்தருடைய கட்ட ளைகளுக்கு விரோதமான கிரியைகளை சட்டபூர்வமாக்கியிருக்கின் றார்கள். வேதத்தின்படி செய்யாதே என்ற காரியத்தை, நீ செய்யலாம் என்று அனுமதித்திருக்கின்றார்கள். நாம் அவைகளுக்கு உட்பட்டவர்கள் அல்லர். அவைகளைத் தவிரவும் ஏனைய நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கின்றோம். எடுத்துக்காட்டாக, நாம் நாட்டின் சட்டதிட்டத்திற்கமைய வருமான வரியை நாம் முறைப்படி செலுத்த வேண்டும். சில வேளைகளிலே அநியாயங்களை சகித்துக் கொள்ள நேரிட்டாலும், நாம் கர்த்தர் நிமித்தம் அவைகளை சகித்துக் கொண்டு, நெருக்கத்தின் மத்தியிலும் நம்முடைய நற்பண்புகளை நாம் வெளிக் காட்ட வேண்டும். நாம் இவ் உலகத்திற்கு வெளிச்சமாக நாம் ஏற்படுத்த ப்பட்டிருக்கின்றோம். இந்த உலகிலே பாவ இருள் சூழ்ந்திருக்கின்றது. அதாவது, அநியாயங்கள் எந்த மட்டத்திலும் நடைபெறலாம். ஆனால், அவைகள் மத்தியிலே நாமோ இந்த உலகத்தாரைப் போல வாக்கு வாதங்களிலும், சண்டைகளிலும் கலகங்களிலும் ஈடுபடாமல், நாம் கர்த் தருடைய வார்த்தையின்படி சுடர்விட வேண்டும். நாம் பாவம் செய்து அழிந்து போக வேண்டும் என்பதே எதிராளியாகிய பிசாசானவனின் திட்டம். அதற்கு நாம் உட்படாமல், நீங்கள் தீமையினாலே வெல்லப்ப டாமல், தீமையை வேத வார்த்தைகள் கூறும் நன்மையினாலே வெல்லு கின்றவர்களாக இருக்க வேண்டும். தீமை உங்களை மேற்கொள்ள ஒருபோதும் இடங்கொடாதிருங்கள்.

ஜெபம்:

நீங்கள் இந்த உலகத்திற்கு வெளிச்சமாகயிருக்கின்றீர்கள் என்று கூறிய தேவனேஇ அநியாயங்களைக் கண்டு நான் தீமைக்கு தீமை செய்யாதபடிக்குஇ உலகத்தில் சுடர்விடும் தீபமாக இருக்க என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:12