புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 03, 2021)

நிச்சயமாகவே முடிவு உண்டு

ஆபகூக் 3:19

ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன் அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமானஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.


ஆபகூக் என்னும் தேவ மனுஷனுடைய நாட்களிலே, ஜனங்களுடைய அக்கிரமங்கள் மிகுதியாக பெருகி இருந்தது. அதனால் ஆபகூக் விரக்தியடைந்த நிலையிலே, கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே. கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே. நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவி னையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது. வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு. ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது. துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்ளுகிறான்; ஆத லால் நியாயம் புரட்டப்படுகிறது என்று தன் மனதின் ஆதங்கத்தை தேவனாகிய கர்த்தரிடம் தெரிவித்தார். அந்த வேளையிலே தேவனாகிய கர்த்தர் தம்முடைய திட்டத்தினை ஆபகூக்கிற்கு தரிசனமாகக் காண்பித்தார். இனிவரும் நாட்களையும், தம்முடைய நியாயத்தீர்ப்பின் நிச்சயத்தையும், துன்மார்க்கத்தில் வாழ்பவர்களின் முடிவையும் ஆபகூக்கிற்கு தெரியப் பண்ணினார். அந்த வேளையிலே ஆபகூக்: கர்த்தாவே, நீர் வெளிப்ப டுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று. நான் கேட்ட பொழுது என் குடல் குழம்பிற்று. அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது. என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று. என் நிலையிலே நடுங்கினேன். ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும் போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன். அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தில் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்று ப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன் என்று பாடினார். பிரியமானவர்களே, உங்களைச் சூழ நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். கர்த்தரே என் பெலன் என்று அவருடைய நேரத்தி ற்காக பொறுமையுடன் காத்திருங்கள். நிச்சயமாக முடிவு உண்டு.

ஜெபம்:

நீதியின் தேவனே, எங்களைச் சூழ நடக்கின்ற அக்கிரமங்களையும் அநியாயங்களையும் கண்டு நாங்கள் சோர்ந்து போகாதபடிக்கு உம்மு டைய வேளைக்காக காத்திருக்க நீடிய பொறுமையத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யூதா 1:15