புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 30, 2020)

கர்த்தருடைய ஆசீர்வாதம்

நீதிமொழிகள் 10:22

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.


நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்க ப்பட்டிருப்பாய். உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர் வதிக்கப்பட்டிருக்கும். நீ வருகையி லும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டி ரு ப்பாய் என்று பரிசுத்த வேதாகமத் திலே வாசிக்கின்றோம். இந்த ஆசீர் வாதத்திற்கு உரித்தானவர்கள் யார்? நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்த த்துக்குச் செவிகொடுக்கும்போது, இப் பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உன க்குப் பலிக்கும். தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளி ன்படியெ ல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண் மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியி லுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். இந்த உலகத்தின் ஐசுவரியத்தை நாடித் தேடும் மனிதர்கள் அதினாலே ஒரு போதும் மனத் திருப்த்தியடைவதில்லை. அது சோதனையிலும் கண்ணி யிலும், மனு~ரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழச் செய்கின்றது. கர்த்தரால் ஐசுவரியத்தைப் பெற்றவன், கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கின்றான். அவன் திரான செல்வத்திலே களிகூருகின்றது போல, கர் த்தருடைய கற்பனைகளிலே களிகூருகின்றான். கர்த்தருடைய ஆசீர் வாதம் ஐசுவரியத்தை தரும். அந்த ஐசுவரியம் கர்த்தரால் உண்டாயி ருந்தால், அவர் அந்த ஐசுவரியத்தோடு அவர் “போதும் என்கிற மனதை யும்” (மனத்திருப்தி) கொடுக்கின்றார். அதனால், ஐசுவரியமானது அவ னுக்கு வேதனையாக மாறிவிடுவதில்லை. உலக பொருளின் ஆசை அவ னை பற்றிக் கொள்வதில்லை. ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, இன்று நீங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் கர்த்தருக்குள் மனரம்யமாக இருக்க கற்றுக் கொண்டால், அது தேவனாலே உண்டான ஆசீர்வாதமாக இருக்கின்றது. உலக பொருளைக் குறித்த ஆசை, எப்போதுமே இருதய த்தில் விதைக்க ப்பட்ட தேவனுடைய வார்த்தையை நெருக்கிப் போடும். கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நடவுங்கள். மனத்திருப்தியடையக் கூடிய ஆசீர்வாதத்தை அவர் நமக்கு தந்தருள்வார்.

ஜெபம்:

ஆசீர்வதிக்கும் தேவனே, வேதனை உண்டாக்கும் ஐசுவரியத்தை நான் நாடித் தேடாமல், போதும் என்கின்ற மனதுடனே கூடிய ஆசீர்வாதத்தை நீர் எனக்கு தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 28:1-7