புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 29, 2020)

உன்னத ஆசீர்வாதங்கள்

எபேசியர் 1:3

அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.


தன் வேலையிலே முன்னேற்றங்களையும், குடும்பத்திலே பொருளாதார வளர்ச்சியையும் கண்ட மனிதன், “தேவன் என்னை ஆசீர்வதித்திருக்கி ன்றார்” என்று தன் பாட்டனாரிடம்; கூறினார். அதற்கு பாட்டனார்: மகனே, உலகிலே வாழும் மனிதர்கள் தேவ ஆசீர்வாதத்தின் அளவுகோலாக பொருளாதாரத்தை முதலிடத்திலே வைத்திருக்கின்றார்கள். தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரி யனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர் கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். தேவன் மனிதர்களின் கைகளின் பிர யாசத்தை ஆசீர்வதிப்பது உண்மை. ஆனால் இந்த உலகமும் அதிலுள்ள பொருட்களும் அழிந்து போகும். அவை நிலையானவைகள் அல்ல. கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கும் கர்த்தர், “பூமியிலே உங்களுக்குப் பொக்கி~ங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்க ளுக்கு பொக்கி~ங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை. அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடு கிறதும் இல்லை. உங்கள் பொக்கி~ம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். எனவே உன்னிடத்தில் வந்த ஐசுவரியம் தேவனிடத்திலிருந்து வந்த ஆசீர்வாதமாக இருந்தால், அதற்கு ஒரு காரணம் இருக்கும். அதை உணர்ந்தவனாய், மனத் தாழ்மையுடன் தேவ சித்தத்தை நிறைவேற்று. தம்முடைய குமாரனாகிய இயேசுவின் விலை மதிக்க முடியாத இரத்தத்தினாலே பாவ அடிமைத் தனத்திலிருந்து எங்களை விடுதலையாக்கி, தம்முடைய ராஜ்யத்தின் உடன் பங்காளி களாகும்படி எங்களை தகுதிப்படுத்தியிருக்கின்றார். அதைவிட பெரி தான ஆசீர்வாதம் ஒன்றுமில்லை. அத்தோடு உன்னதங்களிலே ஆவிக் குரிய சகல ஆசீர்வாதத் தினாலும் நம்மை ஆசீர் வதித்திருக்கிறார்.அந்த பெரிதான ஆசீர்வாதத்தை எல்லா காவலோடும் நாங்கள் எப்போதும் காத்துக் கொள்ள வேண்டும். தேவனால் வரும் வேறெந்த ஆசீர்வாத மும் இந்த பெரிதான ஆசீர்வாதத்திற்கு முரணானது அல்ல என்று பதில் கூறினார். ஆம் பிரியமானவர்களே, தேவன் அருளிய உன்னதமாக ஈவுகளை எண்ணிப் பாருங்கள். அழியாத அந்த ஆசீர்வாதங்களை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நிலையான ராஜ்யத்திற்கு எங்களைத் தகுதிபடுத்திய தேவனே> நீர் எங்களுக்கு அருளியிருக்கும் உன்னத ஆசீர்வாதங்களை கண்டு கொள்ளு ம்படிக்கு மனப் பிரகாசமுள்ள கண்களைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:19