புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 25, 2020)

வாரத்தின் முதலாம் நாள்

யோவான் 20:19

வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங் காலவேளையிலே, சீஷர் கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததி னால் கதவுகள் பூட்டியிரு க்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக் குச் சமாதானம் என்றார்.


பழைய ஏற்பாட்டின் வழிபாட்டு முறைமைகளின்படி வாரத்தின் ஏழாம் நாளை ஓய்வு நாளாக அனுசரித்து வந்தார்கள். அவர்களுக்கு கொடு க்கப்பட்ட “வழிபாட்டு முறைமைகளின்படி” பாவநிவர்த்திக்காக சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் கொடுக்கப்பட்டு வந்தது. அந் நாட்களிலே அவர்கள் மிருக ஜீவன்களையும், பறவைகளையும், தானிய ங்களையும் பலியாகவும், காணிக்கை யாவும் கொடுத்து வந்தார்கள். அந்ந வழிபாட்டு முறைமையானது, இனி வரவிருக்கும் நன்மைகளின் நிழலாக இருந்து வந்தது. பிதாவாகிய தேவ னின் அநாதி தீர்மானத்தின்படி, மனித குலத்தின் பாவத்தை போக்கும் பலி யாக தேவ ஆட்டுக்குட்டியாக இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே ஒரே தரம் சிலுவையிலே பலியாக ஒப்புக் கொடு த்தார். குற்றமில்லாத மாசற்ற ஆட்டு க்குட்டி யாகிய கிறிஸ்துவின் விலை யேறப்பெற்ற இரத்தத்தினாலே மனி தகுலத்திற்கு மீட்பு உண்டாயிற்று. இதுவே வரவிருந்ததும், தேவ தாசர் கள் எதிர்பார்த்திருந்ததுமான ஞானநன்மை. இவ்வண்ணமாக மீட்பராகிய இயேசு கிறிஸ்துவானவர் பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, பழைய ஏற்பாட்டின் “வழிபாட்டு முறைமைகளை” நிறைவேற்றி முடித் தார். இதனிமித்தம் நித்திய மரணத்தை வென்று, பாதாளத்தை ஜெயி த்து வாரத்தின் முதலாம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) அவரை பிதாவா கிய தேவன் தாமே உயிர்தெழச் செய்தார். அந்த நாள் கர்த்தருடைய நாளாக அனுசரிக்கப்பட்டு வருகி ன்றது. வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரும் “பெந்தேகோஸ்து” நாளன்று, அதாவது கர்த்தர் உயிர் தெழுந்த நாளிலிருந்து ஐம்பதாவது நாள், வாரத்தின் முதலாம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) பிரதியட்சமாய் இறங்கி வந்ததும் குறிப்பிடத்த க்கது. எனவே கர்த்தருடைய நாளை சகல கனத்தோடும் பரிசுத்தமாய் அனுசரியுங்கள். ஆலயத்திற்கு சென்று பயபக்தியோடு, ஒருமனதோடு ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும். ஆராதனைக்கு செல்லும் நேரத்தோடு மட்டும் அந்த நாள் முடிவடைந்து போவ தில்லை. கர்த்தரு க்கென்று நியமிக்கப்பட்ட நாளிலே நாங்கள் இன்னும் அதிகமான தேவ காரியங்களைக் குறித்த தியானமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பிதாவே,ஆவியோடும் உண்மையோடும் உம்மை ஆராதிக்கும்படிக்கு, ஆர்வத்தோடு ஆலயத்திற்கு செல்லவும், உம்முடைய நாளை பரிசுத்தமாக அனுசரிக்கவும் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 3:23-25

Category Tags: