புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 23, 2020)

நீதிமான்கள்

சங்கீதம் 34:15

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.


தீய வழியிலே நடக்கும் துன்மார்க்கனுக்கும், கொள்கை அடிப்படை யிலே நல்ல வழியிலே நடக்கும் சன்மார்கனுக்கும் இந்த உலகத்திலே தொல்லைகளும் க~;டங்களும் ஏற்படுகின்றது. அப்படியானால் அநீதி நிறைந்த இந்த உலகத்திலே, தேவனுடைய பிரமாணங்களின்படி வாழும் நீதிமானுடைய நிலை என்ன? ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த சில மனி தர்களுக்கிடையிலே கலவரம் ஏற்பட்ட தால், அந்த அயலிலே பெரிதான சண் டைகள் நடந்து கொண்டிருந்தது. அந்த அயலிலே துன்மார்க்கர்களும், சன்மார் க்கர்களும் இருந்தார்கள். அவர்கள் யா வருமே இந்த சண்டைகளினாலே பெ ரும் குழப்பமடைந்திருந்தார்கள். தங்கள் கொள்கைகளின்படி அந்த சூழநிலை களை அவர்கள் தீர்த்து வைக்க முயன் றார்கள். ஆனாலும் அந்த அயலிலே ஒரு நீதிமான் வாழ்ந்து வந்தான். அவன் அந்த ஊரை அரசாளும் ராஜாவை அறி ந்திருந்ததால், அந்த இக்கட்டான சூழ்நிலைகள் மத்தியிலும், ராஜாவினு டைய கட்டளையை பின்பற்றினான். ஏனெனில், ராஜா வரும் போது, இந்தக் குழப்பங்கள் யாவற்றிற்கும் நிச்சயமாக நீதி செய்வார் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே பொறுமையோடு காத்திருந்தான். அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. பிரியமானவர்களே, இந்த சம் பவத்தை சற்று ஆராய்ந்து பாருங்கள். இந்த உலகிலே துன்மார்க்கன், சன்மார்க்கன், நீதிமான் யாவருக்குமே ஒரே விதமான சூழ்நிலைகள் ஏற்படு கின்றது. துன்மார்கன் தன் பொல்லாத வழிகளின்படி தன் முடிவுகளை எடுத்துக் கொள்கின்றான். சன்மார்க்கன் தன் கொள்கையின் அடிப்படையிலே வாழ்ந்து வருகின்றான். ஆனால் தேவனை நம்பி வாழும் நீதிமான் தன்னுடைய தேவனுடைய பிரமாணங்களின்படி தன் வாழ்க்கையை வாழ்கின்றான். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. தேவனுடைய வழிகளிலே நடக்கும் நீதிமான், இரவும் பகலும் வேத வசனத்திலே தியானமாக இருக்கின்றான். அவன் தினமும் தன்னுடைய தேவனை நோக்கி ஜெபிக்கின்றவனாயிருக்கின்றான். ஆதலால் அவன் பொல் லாப்புக்கு விலகி தன் ஆத்துமாவை காத்துக் கொள்கின்றான். அவன் நம்புவது தேவனாலே ஆகும்.

ஜெபம்:

நீதியின் தேவனே, உம்முடைய ஆலோசனைகளின் வழியிலே பூரண சமாதானம் உண்டு என்பதை உணர்ந்து, உம்முடைய வசனத்தை தியானித்து, உம்மிலே பெலன் கொள்ளும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:34