புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 18, 2020)

தேவ ராஜ்யத்திற்குரியவைகளை நாடுங்கள்

மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.


ஒரு சமயம் இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புத ங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென் றார்கள். இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீ~ருட னேகூட உட்கார்ந்தார். ஜனங்கள் சாப்பிடும்படிக்கு அங்கிருந்த ஒரு சிறு பையனிடமிருந்த ஐந்து வாற்கோ துமை அப்பங்களையும் இரண்டு மீன் களையும் பலுகிப் பெருகச் செய்தார். அவ்விடத்திலே பந்தியிருந்த புரு~ ர்கள் மாத்திரம் ஏறக்குறைய ஐயா யிரம் பேராயிருந்தார்கள். யாவரும் திருப்தியாய் உண்ட பின்பு, அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளி னாலே பன்னிரண்டு கூடைகளை நிர ப்பினார்கள். இதை கண்ட ஜனங்கள் மறு நாளிலும் இயேசுவை தேடிச் சென்றார்கள். அவர்களின் தவறான மனநிலையை உணர்ந்து கொண்ட இயேசு அவர்களை நோக்கி: இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவ ன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனு~குமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். பிரியமானவர்களே, இயேசு அற்புதம் செய்ய வல்லவர். நித்திய வாழ்வை கொடுக்கும் வசனங்கள் அவரிடமே உண்டு. எனவே நாங்கள் அவரை தேடிச் செல்வது நல்லது. ஆனால், ஏன் நாங்கள் அவரை தேடிச் செல்கின்றோம் என்பதைக் குறித்து உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த உலகத்தோடு அழிந்து போகும் உணவுக்கும், பொருட்களுக்கும் மட்டுமே இயேசுவை தேடுவோமாக இருந்தால், இயேசு கிறிஸ்துவானவர் இந்த உலகத்தி ற்கு வந்த மேலான நோக்கத்தை மறந்தவர்களாக இருப்போம். எங்கள் தேவைகளை என்னவென்று பரம பிதா அறிந்திருக்கின்றார். எனவே அவற்றை குறித்து கவலையடையாமல், தேவனுடைய ராஜ்யத்திற் குரிய மேன்மைகளை அடைந்து கொள்ளும்படிக்கு ஆண்டவராகிய இயேசுவை நாடிச் செல்ல வேண்டும்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கென எங்களை அழைத்த தேவனே, இந்த பூமிக்குரியதும் அழிந்து போகிறதுமான பொக்கிஷங்களைத் தேடாமல், நித்தியத்திற்குரியவைகளை நாடித் தேட உணர்வுள்ள இருதயத்தை தந்தரு ள்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 6:44