புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 15, 2020)

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்

1 பேதுரு 5:8

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்


ஒரு தாயானவள் தன் மகனை அழைத்து, கடைக்கு சென்று இரவு ஆகாரத்திற்கும், நாளைய தினத்தின் ஆகாரங்களுக்குமான உணவுப் பொருட்களை வாங்கி வரும்படிக்கு தன் கணவருடைய அன்றாடைய உழைப்பின் பிரயாசத்தை அவனிடம் கொடுத்து, அவனை சீக்கரமாய் சென்று வரும்படி கூறியிருந்தாள். போகும் வழியிலே அவனுடைய நண்ப ர்கள், தெருவருகே இருந்த வயலொன் றில் கிரிக்கெற் விளையாடிக் கொண்டி ருந்தார்கள். இரண்டு நிமிடங்கள் அங்கே தரித்திருந்து விளையாட்டை பார்த்துவிட்டு செல்வோம் என்று தெரு வருகே தன் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தான். அவனை கண்ட நண்பர்கள், அவர்களுடன் கொஞ்ச நேரம் விளையாடும்படி வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அவனோ அரைமனதுடன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்க ளோடு சேரந்து விளையாடிய பின், அவசரவசரமாக கடைக்கு சென்றான். பொருட்களை வாங்கிய பின்பு, தன் காற்சட்டை பைக்குள் பணத்தை எடுக்கும்படி கையைப் போட்டான். தன் தாயார் கொடுத்த பணத்தை அங்கே காணவில்லை. தான் வந்த வழியே பணத்தை தேடிய வண் ணம், நண்பர்களோடு சேர்ந்து விளையாடிய வயலுக்குச் சென்றான். பொழுதுபட தொடங்கியதால் நண்பர்கள் யாவரும் வீடு சென்று விட்டா ர்கள். தான் ஓடி விளையாடிய இடம் முழுவதும் பணத்தை தேடினான், ஆனால் அவன் தேடுதல் வெற்றியளிக்கவில்லை. தன் தகப்பனானவர் முழு நாள் கஷ்டப்பட்டு உழைத்த கூலியை என் கவனயீனத்தால் தொலைத்துவிட்டேன் என்று மிகவும் துக்கத்துடன் வீடு திரும்பினான். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த சம்பவத்தை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நான் எங்கே போகின்றேன்? எதற்காக போகின்றேன்? என்பதை குறித்து கவனமற்றவனாக இருந்த வாலிபன், இடையிலே தான் ஏற்படுத்திக் கொண்ட இடையூறுகளால் தன் பொறுப்பை அற்பமாக எண்ணி, தன் இலக்கை அடையாமற் போனான். இவ்வண்ணமாகவே, இந் நாட்களிலே, சிலர் தங்கள் அழைப்பின் இலக்கை மறந்து, தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்ளை அற்ப மாக எண்ணி வாழ் நாட்களை வீணடித்துக் கொள்கின்றார்கள். தேவன் எங்களுக்கு தந்திருக்கும் மேலான அழைப்பையும், நாங்கள் நிறை வேற்ற வேண்டிய பொறுப்பையும் குறித்து எப்போதும் விழிப்புள்ள வர்களாயிருப்போம்.

ஜெபம்:

அழைத்த தேவனே, இந்த உலகத்தின் ஆசைகளால் நீர் எனக்கு தந்த பொறுப்பை அற்பமாக எண்ணாதபடிக்கு, எப்போதும் எச்சரிகையுள்ளவனா(ளா)க வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபி க்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - பிலிப்யிர் 3:14